அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் டீசர் யுடியூபில் அதிகம் லைக்குகள் பெற்றதில் உலக சாதனை நிகழ்த்த இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், அந்த சாதனையை விவேகம் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது.
அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது, அப்படங்களின் டிரைலர், டீசர் ஆகியவை யுடியூபில் எவ்வளவு பார்வையாளர்களை கடந்துள்ளது என்ற ரீதியில் போட்டி நடக்கும். இதில் ஒவ்வொரு நடிகரது படங்களின் டிரைலும் ஒவ்வொரு விதத்தில் சாதனை நிகழ்த்தி வந்த நிலையில், அஜித்தின் விவேகம் ஹாலிவுட் படங்கள் உட்பட உலக அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியத்து, உலகளவில் அதிக விருப்பங்களைப் பெற்ற டீசர் என்ற புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இதற்கு முன்பாக 'ஸ்டார்வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' என்ற ஹாலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதனை கடந்துள்ளது 'விவேகம்' படத்தின் டீஸர்.
எதிர்மறையான விமர்சனக்களோடு, வியாபார ரீதியாகவும் பெரிய தோல்வியை விவேகம் சந்தித்ததால், மிகவும் துவண்டிருக்கும் அப்படக்குழுவினருக்கு இத்தகைய சாதனைகள் புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...