மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர்களில் அரவிந்த் சித்தார்த்தாவும் ஒருவர். ‘காவியத் தலைவன்’, ‘வள்ளி வரப்போறா’, ‘முற்றுகை’, ‘ராஜாளி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கும் அரவிந்த் சித்தார்த்தா, பல சர்வதேச விருது பெற்ற குறும்படங்களுக்கும், டாக்குமெண்ட்ரி படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
திரைப்படக் கல்லூரி மாணவர்களில் பல டிப்ளமோ மற்றும் குறும்படங்களுக்கு அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்திருக்கிறார். அதில் ஒன்று தான் ஆபாவாணன் இயக்கிய ‘மர்டர் எக்கோ’. இப்படம் தான் பின்னாளில் ‘ஊமைவிழிகள்’ படமாக வெளியானது. அதேபோல், ஆஸ்கார் தகுதி சுற்றுக்கு நாமினியாக சென்ற குறிஞ்சி வேந்தனின் சயாம் பர்மா மரண ரெயில் பாதை ஆவணப் படத்திற்கு இவர் தான் இசையமைத்தார். பிரான்ஸ் திரைப்பட விழாவில் அப்பா குறும்படத்திற்கு இசை அமைத்ததற்காக சிறந்த இசை அமைப்பாளர் விருது பெற்ற அரவிந்த் சித்தார்த்தா, பல தொலைக்காட்சி தொடர்களுக்கும், பக்தி ஆல்பங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். ‘வாரிசு’, ’பல்லாங்குழி’, ‘ஆளவந்தார் கொலைவழக்கு’ போன்ற தொடர்கள் அதில் பிரபலமான தொடர்களாகும்.
தற்போது ‘அழியாத கோலங்கள் 2’ மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களின் மனதில் இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தா இடம் பிடித்திருக்கிறார்.
எம்.ஆர்.பாரதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நாசர், பிரகாஷ்ராஜ், ரேவதி, அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நவம்பர் 29 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே உள்ளது. அப்பாடலை வைரமுத்து எழுதியிருக்கிறார். அரவிந்த் சித்தார்த்தாவின் மெட்டை கேட்ட வைரமுத்து, இப்பாடல் மிகப்பெரிய வெற்றியடையும் என்று நம்பிக்கை தெரிவித்ததோடு, இப்பாடலை சித்ரா பாட வேண்டும் என்று விரும்பி, அவரே சித்ராவை தொடர்பு கொண்டு, இப்பாடல் மிகப்பெரிய வெற்றி பெறும், நீங்கள் தான் பட வேண்டும், என்று கூறினாராம்.
அவர் சொன்னது போலவே தற்போது, ”இருவிழிகளில் ஈரமா...” என்ற அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருப்பதோடு, படத்தின் பின்னணி இசையையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சமீபத்தில் சிறப்பு காட்சியை பார்த்த பத்திரிகையாளர்களும், பாடலையும், பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினார்கள்.
பின்னணி இசையில் தனக்கென ஒரு முத்திரையை ‘அழியாத கோலங்கள் 2’ மூலம் பதித்திருக்கும் இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தா, மெல்லிசை மாமன்னர் எம்எஸ்.விஸ்வநாதன் பாடல்கள் போல் ஜனரஞ்சகமான காலத்தால் அழியாத நல்ல மெலோடிக்களை கொடுக்க வேண்டும், என்று விரும்புவதோடு, தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் பாடல்களை கொடுக்க கூடியவராக திகழ்கிறார்.
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...