Latest News :

”’ஜடா’ ஒரு யூசுவல் படம் கிடையாது” - நெகிழ்ச்சியோடு கூறிய கதிர்
Wednesday November-27 2019

’பிகில்’ படத்தை தொடர்ந்து கதிரின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘ஜடா’. கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை தி போயட் ஸ்டுடியோஸ் (The poet studios) தயாரிக்க, அறிமுக இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார்.

 

இதில் கதிர் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ரோஷினி பிரகாஷ் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுவாஸ்திகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி, ஏபி.ஸ்ரீதர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசுகையில், “நான் படம் பண்ணும் போது ஹீரோ யார்னு பார்க்குறதில்ல. படத்தின் கண்டெண்ட் என்ன என்பதில் கவனமாக இருப்பேன். கைதி, ஜடா படங்கள் எல்லாம் இசைக்கே வேலையில்லாத வகையிலான படங்கள். அதாவது இப்படியான படங்களில் எங்கள் வேலை மிக சுலபம் தான். கதிர் இப்படத்தில் கதாநாயகன் அல்ல. கதையின் நாயகன். இப்படத்தில் கதிர் ஜடாவாக வாழ்ந்திருக்கிறார். படம் விட்டு வெளிவரும் போது படத்தில் நடித்துள்ள எல்லாக் கேரக்டர்களும் மனதில் பதிந்துவிடுவார்கள். நான் எந்தப் படத்தில் இசை அமைத்தாலும் அப்படத்தின் கதையை படித்துவிட்டு தான் இசை அமைப்பேன். ஜடா கதையை படித்தபோதே மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு வரும் படங்கள் எல்லாம் பேக்ரவுண்ட் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தான் வருகிறது. இந்த ஜடா படம் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் சாதாரண படங்கள் லிஸ்டில் வராது. இப்படம் மிகச்சிறப்பாக இருக்கும். இந்தப்படத்தை கட்டாயமாக தியேட்டரில் பாருங்கள்” என்றார்.

 

இயக்குநர் குமரன் பேசுகையில், “இந்த ஒரு மேடை தான் இத்தனை வருடத்தின் கனவு. இதற்கு எனக்கு சப்போர்ட் பண்ண அம்மா அப்பா அண்ணனுக்கு நன்றி. ஒரு நல்ல கதை எழுதிருக்கேன்,  படம் பண்ணனும் எனும்போது ரிச்சர்ட் சார் கெளதம் சார் இருவரையும் மீட் பண்ணேன். கதை சொல்லி முடித்ததும் நல்லாருக்கு இதை மூவ் பண்ணுவோம் என்றார். விக்னேஷ் சாரை மீட் பண்ணி இவன் இயக்குநர் அட்வான்ஸ் கொடுங்க என்றார் கெளதம் சார். அந்த மொமண்ட் ரொம்ப உணர்வுப்பூர்வமாக இருந்தது. ரிச்சர்ட் சார் ’விக்ரம் வேதா’ படத்தின் எடிட்டர் எனும் போது பதட்டமாக இருந்தது. விக்னேஷ் சார் பெரிய லைப் கொடுத்திருக்கிறார். சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி. 

 

சாம்.சி.எஸ் சாரோட பெரிய ரசிகர் நான். இந்தப்படத்திற்கு அவரின் இசை ரொம்ப சூப்பரா இருக்கும். புஷ்கர் சார் காயத்ரி மேடத்திற்கு ஒருமுறை கதை சொல்லு என்றார் கெளதம் சார். அவர்களிடம் கதை சொன்னதும் அவர்கள் அவ்வளவு அழகா உள்வாங்கி ஹெல்ப் பண்ணாங்க. கதிர் ஸ்வீட் பெர்சன். மூன்று மணிநேரம் கதை கேட்டார் ரொம்ப ஆர்வமாக படத்திற்கான பயிற்சியில் இறங்கி விட்டார். இப்படத்தில் அவரை பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சூர்யா சாரின் விஷுவல்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். இப்படத்தில் நடித்த உழைத்த அனைவருக்கும் நன்றி. எல்லாரையும் விட என் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் பெரிய நன்றி. ஒரு அடித்தட்டு இடத்தில் இருக்கும் ப்ளேயரிடம் நேஷ்னல் அளவில் விளையாடும் அளவிற்கு திறமை இருக்கும். ஆனால் பொருளாதார காரணங்களால் விளையாட முடியாது. அதில் சில வித்தியாசமான விசயங்களை உள்வைத்து படத்தை எடுத்திருக்கிறேன். அவசியம் படம் பாருங்க. அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

 

இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி பேசுகையில், “புரோடியூசர் விக்னேஷ் ரொம்ப தங்கமான மனிதர். படம் பண்ணணும் என்று பண்ணாமல், நல்ல கதையை தேர்ந்தெடுத்து செம்மயா தயாரிப்பாளரா ஜெயிச்சிட்டார். கதிர் ஒரு ஸ்பெசல் ஹீரோ. குமரன் மூன்று மணிநேரம் கதை சொன்னார். அது அவ்வளவு அற்புதமாக இருந்தது. இந்த படத்தில் உள்ள ஸ்போர்ட்ஸுக்கும் அந்த இடத்திற்கும் அவ்வளவு பொருத்தமான படம் இது. படத்தின் இடையில் வரும் ஒரு திருப்புமுனை ரொம்ப சூப்பரா இருக்கும். இந்தப்படத்தில் பாசிட்டிவ் சைன் நிறைய இருக்கிறது” என்றனர்..

 

நாயகன் கதிர் பேசியதாவது, “புஷ்கர் காயத்ரி மேடம் பசங்க எல்லாரும் சேர்ந்து படம் பண்ண எப்படி இருக்குமோ அதுதான் ஜடா. குமரன் அற்புதமான கிரியேட்டர் என்பதை தாண்டி துளியும் ஈகோ இல்லாத டைரக்டர். எல்லோர் கொடுக்கும் இன்புட்டையும் வாங்கி சிறப்பாக செய்வார். இந்த மாதிரி ஒரு டீம் அமைவது முக்கியம். சாம்.சி எஸ் இசை படத்திற்கு முக்கியமாக அமைந்துள்ளது. ஜடா ஒரு யூசுவல் படம் கிடையாது. படத்தில் நிறைய ப்ளேவர்ஸ் இருக்கு. நிறைய எமோஷன் இருக்கும். அதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. இண்டெர்நேஷனல் புட்பாலுக்கும், ஸ்ட்ரீட் புட்பாலுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் நிறைய இந்தப்படத்தில் இருக்கும். பிகில் படமும் புட்பால், இந்தப் படமும் புட்பால் என்று நிறையபேர் கேட்கிறார்கள். அந்தப்படம் வேற, இந்தப்படம் வேற. சாம்.சி.எஸ் இசையை பெரிய ஸ்கிரீனில் படத்தோடு கேட்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. குமரன் சூர்யா இருவரின் காம்பினேஷன் தான் விஷுவல்ஸ் எல்லாம் சூப்பரா இருக்க காரணம். இது ஒரு கிரேட் டீம் ஒர்க்” என்றார்.

Related News

5926

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery