‘காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் மல்டி ஆர்டிஸ்ட் படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படம் குறித்து கடந்த ஒரு மாதமாக பல தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்று இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.
மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் தயாரித்து இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.
பிரம்மாண்டமான முறையில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்குகிறது.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...