Latest News :

ரஜினியிடம் பார்த்ததை கார்த்தியிடமும் பார்க்கிறேன்! - பெருமைப்பட்ட ஜோதிகா
Saturday November-30 2019

கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா, தம்பியாக நடித்திருக்கும் படம் ‘தம்பி’. ‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், செளகார் ஜானகி, நிகிலா விமல், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி இன்று, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் சூர்யா மற்றும் சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “அப்பா அம்மா முன்னாடி மேடையில் தமிழ் பேசறதுக்கு எனக்கு பயம். தம்பி எனக்கு படம் இல்ல ஒரு செண்டிமெண்ட். என் தம்பியோட நடிக்கிற முதல் படம். என் அம்மா ஒரு நாள் ஷூட்டிங் வந்தாங்க. அவங்கள நான் சாப்பிடுங்கனு சொன்னேன், ஆனா அவங்க நான் ஹீரோயின் அம்மாவா வரல, நான் என்னோட பையன் படத்திற்கு வந்துருக்கேன்னு சொன்னாங்க. அவங்க முகத்தில் அவ்வளவு பெருமிதம். எனக்கும் அவ்வளவு பெருமிதம் இருக்கு. கார்த்திகிட்ட முதலிலிருந்தே ஒரு விசயம் சொல்ல வேண்டியது இருக்கு. அவரோட எல்லாப் படத்திலேயும் அவர் கூட நடிக்கிற கேரக்டர்களுக்கு சமமான இடம் கொடுப்பார். ரஜினி சார் கூட சந்திரமுகி நடிச்சப்போ, முதல் நாள் அவர் வந்து, “இது உன்னோட படம் நல்லா பண்ணு, சந்திரமுகி பேரே உன்ன வச்சுதான்னு” சொன்னார். எவ்வளவு பெரிய மனுசன்னு தோணுச்சு. அதே ஃபீல் காத்த்திகிட்ட இருந்தது. தன் கூட நடிக்கிறவங்களுக்கு அவ்வளவு இடம் கொடுக்கிறார். சத்யாராஜ் சார் கூட நடிச்சது மிகப்பெரிய சந்தோஷம் வீட்டில் சொன்னப்போ என் குழந்தைகள் அம்மா நீங்க கட்டப்பா கூட நடிக்கிறீங்கனு கேட்டாங்க. அவங்களுக்கு அது தான் ஸ்பெஷல். இயக்குநர் ஜீத்து ஜோசப் ரொம்பவும் அன்பான மனிதர். அவர் வீட்டில் இருந்து அவரோட பெண்கள் உதவி இயக்குநரா வேலை பார்த்தாங்க அவங்கள பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருந்தது. கோவிந்த் வசந்தா மியூஸிக் என்னோட ஃபேவரைட். சூப்பரான மியூஸிக் தந்திருக்கார். இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

கார்த்தி பேசுகையில், “இரண்டு வருட உழைப்பு இந்தப்படத்துக்கு பின்னாடி இருக்கு. ஒவ்வொன்னா சேர்த்து இந்தப்படத்த உருவாக்க இரண்டு வருஷம் ஆகியிருக்கு. இயக்குநர் ஏற்கனவே மோகன்லால், கமல் சார் படமெல்லாம் பண்ணிட்டு வந்திருக்கார். எனக்கு பயமா இருந்தது. ஆனா எதிர்பார்த்தற்கு எதிரா அவ்வளவு இயல்பா, நட்பா இருந்தார். அவருக்கு என்ன வேணுங்கறதுல ரொம்பவும் தெளிவா இருந்தார். அப்புறம் அண்ணி கூட நடிச்சது எனக்கு ஸ்பெஷல். அவங்க ஒரு கேரக்டருக்கு எடுக்கிற சிரத்தை, உழைப்பு பிரமிப்பு தருது. இப்படி அண்ணி கூட ஒரு படம் நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்ல. நடிச்சது சந்தோஷம். சத்யாராஜ் மாமா இல்லாட்டி இந்தப்படமே வேண்டாம்னு சொன்னேன். அவ்வளவு முக்கியமான கேரகடர். சினிமாவில் ஒழுக்கம் என்பதை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் அவர் தொழில் மேல காட்டுற மரியாதை பெரிசு. கட்டப்பால்லாம் இன்னக்கி பண்ண இந்தியாவுல ஆள் இல்லை. இளவரசு, ரமேஷ் திலக் ரெண்டு பேரையும் நீங்க ரசிப்பீங்க. கோவிந்த் வசந்தா அலட்டிக்காம, கஷ்டமே படாம ரொமப ஈஸியா மியூஸிக் பண்ணிடுறாரு, அவருக்கு அது வரம். படம் பார்த்தேன் மியூஸுக் அவ்வளவு நல்லா வந்திருக்கு. ஒரு நல்ல நடிப்ப இன்னும் அழகு கூட்டி காட்டறது மியூஸிக் தான். கைதிக்கு அப்புறம் இந்தப்படம் வர்றது எனக்கு சந்தோஷம். குடும்பத்தோட எல்லாரும் ரசிக்கிற மாதிரியான படம்.” என்றார்.

 

Thambi Audio Launch

 

இயக்குநர் ஜீத்து ஜோசப் பேசுகையில், “பாபநாசம் என்னோட முதல் தமிழ்ப்படம் அதுக்கப்புறம் நல்ல கதைக்காக வெயிட் பண்ணினேன். சூரஜ் இந்த ஐடியா சொன்னார்.  ஜோதிகா கார்த்தி அக்கா தம்பியா நடிக்கிற ஐடியா இருக்குனு சொன்னவுடனே இத மிஸ் பண்ணக்கூடாதுனு ஒத்துகிட்டேன். சத்யாராஜ், சௌகார் ஜானகி மேடம் இந்தப்படத்துக்கு மிகப்பெரிய பலம். கோவிந்த் வசந்தா அற்புதமாமான இசை தந்திருக்கார். இது ஒரு டீம் ஒர்க் எல்லோரும் அவங்களோட பெஸ்ட் கொடுத்திருக்காங்க. இது குடும்பங்கள் ரசிக்கிற கமர்ஷியல் படம். எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

 

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசுகையில், “உறியடி படத்துக்கு பின்ணணி இசை பண்ணினதுக்கு அப்புறம் சூர்யா சார் ஒரு லேப்டாப் கிஃப்ட் கொடுத்தார். அது தான் எனக்கு சினிமால கிடைச்ச முதல் கிஃப்ட். அந்த லேப்டாப்ல தான் தம்பி மியூஸிக் பண்ணினேன். கார்த்தி சார் ஒரு ஜீனியஸ். மெட்ராஸ் படத்துக்கு அப்புறம் நான் அவரோட பெரிய ஃபேன். ஜோதிகா மேம் கூட படம் பண்ணினது சந்தோஷம். ஜீது சார் கூட இது எனக்கு முதல் படம். படம் நல்லா வந்திருக்கு எல்லோருக்கும் பிடிக்கும்.” என்றார்.

Related News

5935

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

1500 திரையரங்குகளில் ஓளிபரப்பாகும் ‘வெனோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ பட டிரைலர்!
Tuesday October-01 2024

உலகளவில் பிரபலமான மார்வெல் படங்களில் ஒன்றான ‘வெனோம்’ திரைப்படத்தின் புதிய பாகம் ‘னொமோம் : தி லாஸ்ட் டான்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது...

Recent Gallery