Latest News :

மக்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது! - ரஜினிகாந்த்
Sunday December-08 2019

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘தர்பார்’ படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் மிக பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார். இதில் ஹீரோயினாக நயன்தாரா நடிக்க, யோகி பாபு, சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, நவாப் ஷா உள்ளிட்ட பல முன்னணி நசத்திரங்கள் நடித்திருக்கிறார்.

 

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ”ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ரமணா’ படம் எனக்கு பிடித்திருந்தது. பிறகு அவரது ‘கஜினி’ படத்தையும் பார்த்தேன். அவருடன் சேர்ந்து படம் பண்ண விரும்பினேன். அப்போது அவர் என்னிடம் ஒரு கதை சொன்னார். மேலும், அந்த கதைக்கு திரைக்கதை அமைக்க மூன்று மாதங்கள் வேண்டும் என்று கேட்டார். அத்துடன் இந்தியின் கஜினி படம் இயக்கப் போவதாகவும் கூறினார்.

 

அப்போது, நான் ‘சிவாஜி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். பிறகு ‘எந்திரன்’ படத்தில் நடித்தேன். ’லிங்கா’ படத்தில் நடிக்கும் போது, இனி வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடிக்க வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி ‘கபாலி’, ‘காலா’ என்று என் வயதுக்கு ஏற்ற படங்களில் நடித்தேன். கார்த்திக் சுப்புராஜ் என்னை இளமையாக காட்ட ஆசைப்பட்டார். அதற்காக அவர் உழைத்தார்.

 

பிறகு ஏ.ஆர்.முருகதாஸும் அப்படி ஒரு கதையோடு என்னை சந்தித்தார். எனக்கு ரொம்பவே பிடித்தது. மூன்று முகத்திற்குப் பிறகு ஒரு பவு புல்லான படமாக இப்படம் இருக்கும். ரமணா, கஜினி படங்களை விட தர்மார் இரண்டு மடங்கு இருக்கும்.

 

அனிருத் நம்ம வீட்டுப் பிள்ளை. அவரோ இசை படத்திற்கு பலமாக இருக்கும். ‘பேட்ட’ படத்தை விட ‘தர்பார்’ பட பாடல்கள் நல்லா வந்திருக்கு. இளையராஜவுக்கு இருக்கிற ஸ்டோரி சென்ஸ் வேற யாரிடமும் நான் பார்த்ததில்லை. அனிருத்துக்கு இப்பவே அது வந்துவிட்டது.

 

தளபதி படத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் நடித்தேன். அதன் பிறகு அது முடியாமல் போனது. தற்போது சுமார் 29 வருடங்கள் கழித்து அவரது ஒளிப்பதிவில் நடித்திருக்கிறேன்.

 

இயக்குநர் பாலசந்தர் சாருக்கு பிடித்த பெயர் ரஜினிகாந்த், இதை ஒரு நல்ல நடிகருக்கு வைக்க வேண்டும் என நினைத்தவர். அந்த பெயரை எனக்கு வைத்தார். அவருடைய நம்பிக்கையை நான் காப்பாற்றியிருக்கிறேன்.

 

ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்தால் நஷ்ட்டம் ஏற்படாது என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கையையும் நான் காப்பாற்றி வருகிறேன்.

 

அதுபோல், மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண் போகாது. தற்போது அதிகம் பேர் எதிர்மறையாக பேசுகிறார்கள். ஆனால், அவர்களிடமும் நாம் அன்பாக இருப்போம். என்னுடைய பிறந்தநாள் இந்த வருடம் முக்கியமான பிறந்த நாள். 70 வது வயதில் அடியெடுத்து வைக்கிறேன். எப்போதும் போல இந்த வருட பிறந்தநாளுக்கு ஊரில் இருக்க மாட்டேன். என் பிறந்தநாளை யாருடம் ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவுங்கள்.” என்றார்.

Related News

5961

மனைவியுடன் சினிமாவில் கால் பதித்த அறிமுக இயக்குநருக்கு நேர்ந்த சோகம்!
Thursday October-03 2024

தமிழ் சினிமாவில் முதல் முறையாக நிஜமான கணவன் மனைவி தம்பதி, சதா நாடார் - மோனிகா செலினா கதையின் நாயகன், நாயகியாக நடித்திருப்பதோடு, இருவரும் இணைந்து இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘இ தகா சைஆ’...

அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு போட்டியா? - மகனின் திருமணத்திற்காக டி.எம்.ஒய் மேற்கொள்ளும் பிரமாண்ட ஏற்பாடுகள்!
Thursday October-03 2024

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, தனது மகன் திருமணத்தை இதுவரை உலகம் கண்டிராத வகையில் பிரமாண்டமாக நடத்தினார்...

சிக்னல்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் தான் ‘அப்பு’ படம் உருவாக தூண்டுதலாக இருந்தார்கள் - இயக்குநர் வசீகரன் பாலாஜி
Wednesday October-02 2024

ஆர்.கே கிரியேட்டிவ் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வீரா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வசீகரன் பாலாஜி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘அப்பு’...

Recent Gallery