Latest News :

“தமிழக அரசின் விருது ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது” - விமல் நெகிழ்ச்சி!
Monday July-17 2017

2௦09 முதல் 2014 வரையிலான தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுபெற்ற பலரும் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.. அந்தவகையில் 2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது.

 

“2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும்  2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றிருக்கின்றன.. மேலும் 2014ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது ‘மஞ்சப்பை’ பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன்.

 

மேலும் ‘வாகை சூடவா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

 

இதற்கு முழு காரணமான எனது இயக்குனர்களான பாண்டிராஜ், சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் விருதுபெற்ற சக கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

 

எனக்கு ஆரம்பகாலம் தொட்டு ஆதரவு அளித்துவரும் பத்திரிக்கை, ஊடகங்களுக்கும் எனது இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கும் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். 

Related News

60

சினிமாவில் பாதிப்பு இல்லாமல் எதுவும் இல்லை - ‘ட்ராமா’ இசை வெளியீட்டு விழாவில் கே.பாக்யராஜ் பேச்சு
Thursday March-13 2025

அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில், டர்ம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்...

நன்றி தெரிவித்து வெற்றியை கொண்டாடிய ‘எமகாதகி’ படக்குழு!
Thursday March-13 2025

ஆணவக்கொலை தான் கதைக்களம் என்றாலும், அதை மற்றொரு வித்தியாசமான களத்தின் மூலம் மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் ‘எமகாதகி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று திரையர்னக்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

ரசிகர்களை அச்சத்தில் உரைய வைக்கும் ‘மர்மர்’ படத்தின் திரைகள் அதிகரிப்பு!
Wednesday March-12 2025

தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படமாக ‘மர்மர்’ உருவாகி இருக்கிறது...

Recent Gallery