அரசியல் குறித்தும், தமிழக அரசியல்வாதிகள் குறித்தும் கருத்து கூறி வரும் கமல்ஹாசன், தன அரசியலுக்கு வந்தால் தனி கட்சி தான் தொடங்குவேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கிடையே, தான் தனி கட்சி தொடங்கியதும் அரசியல் குறித்து ரஜினிகாந்துடன் பேசுவதுடன், அவர் விரும்பினால் அவரை கட்சியின் இணைத்துக் கொண்டு செயல்படவும் தயார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியின் பேசிய கமல்ஹாசன், ”மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வரத் தயார், அரசியலுக்கு வந்தபின் ரஜினியுடன் பேசத் தயார். ரஜினி விரும்பினால் அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்டம் போராட்டம். நான் தொழிலுக்காக நடிக்கிறேன், சிலர் பதவிக்காக நடித்து வருகின்றனர்.” என்று தெரிவித்தார்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...