’அட்ட கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என்று தொடர் வெற்றிப் படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகியப் படங்களை தயாரித்த நிலையில், தற்போது 5 புதிய திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளார். அவருடன் இணைந்து கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்த திரைப்படங்களை தயாரிக்கின்றன.
இதற்கான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த ஐந்து திரைப்படங்களை இயக்கப் போகும் ஐந்து இயக்குநர்களும் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜும், இந்த ஐந்து படங்களில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். தற்போது தனுஷை வைத்து ஒரு படம் இயக்க இருக்கும் மாரி செல்வராஜ், தனது மூன்றாவது படமாக நீலம் புரொடக்ஷன்ஸ் படத்தை இயக்குக்கிறார்.
‘மேற்குத்தொடர்ச்சி மலை’ படத்தை இயக்கிய லெனின் பாரதி, ஒரு படம் இயக்குகிறார். படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய மூன்று இயக்குநர்களும் மற்ற மூன்று படங்களை இயக்குகிறார்கள். இதில், லெனின் பாரதி மற்றும் பிராங்க்ளின் ஆகியோரது படங்களின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. பிறகு மற்ற படங்களின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித், “சினிமா என்பது ஒரே நேரத்தில் மில்லியன் கணக்கானவர்களுடன் பேசக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். ஒரு நல்ல படம் எவ்வாறு பார்வையாளர்களால் ஏற்கப்படுகிறது, மதிக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் இந்த சினிமா துறையில் கண்டிருக்கிறோம். நான் தயாரித்த முதல் இரண்டு படங்களையும் மக்களுடன் இணைக்க முடிந்ததற்கு மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். இந்த ஒத்துழைப்புக்கான திரைப்படங்கள், கதைகள் மற்றும் இயக்குநர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். கதை சொல்வது என்பது வெகுஜனங்களுடன் தொடர்புகொள்வது பற்றியது, நான் இறுதியாக இந்த கதைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் . "
தமிழ் திரையுலகம் இந்தியாவின் பல திரைப்படத் துறைகளை விட மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்றாகும். பிற மொழிகளில் உள்ள அனைத்து இந்திய படங்களுக்கும் மொத்த பாக்ஸ் ஆபிஸ் பங்களிப்பில் தமிழ் சினிமா கிட்டத்தட்ட 20 சதவீதம் வரை பங்களிப்பு செய்கிறது, தமிழ் படங்கள் நிரூபிக்கப்பட்ட உள்நாட்டு சந்தையைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள வெளிநாட்டு திரைப்பட சந்தைகளிலும் குறிப்பிடத்தக்க விரிவாக்கம் காணப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தி படங்களைப் போலவே, நம் தமிழ்த் திரைப்படங்களான வட சென்னை, 96, பரியேறும் பெருமாள் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய மதிப்பை பெற்றுள்ளது.” என்றார்.
லிட்டில் ரெட் கார் பிலிம்ஸின் விளம்பரதாரர் மற்றும் இயக்குநரான் அதிதி ஆனந்த் பேசுகையில், “நான் எப்போதுமே பா.ரஞ்சித் என்கிற இயக்குநரின் ரசிகர். ஆனால் ஒரு தயாரிப்பாளராக அவரது அர்ப்பணிப்பால் நான் திகைத்துப் போயிருக்கிறேன், பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் என்னை ஆச்சரியப்பட செய்தார், மேலும் அது போன்ற ஒரு தரமான திரைப்படத்தை மீண்டும் பா.ரஞ்சித் மற்றும் எங்கள் அற்புதமான, திறமை வாய்ந்த இயக்குநர்கள் மூலம் உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்.” என்றார்.
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அபயானந்த் சிங் கூறுகையில், “வணிக மற்றும் விமர்சன வெற்றிகளுக்கு இடையில் ஒரு நல்ல சமநிலையை அடைவதற்கான புதிய திறமைகளை இது காண்கிறது என்பதால் நாங்கள் எப்போதும் தமிழ் திரைப்படங்களை பன்முகப்படுத்த விரும்புகிறோம். புதிய இயக்குநர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகிய இருவரையும் உள்ளடக்கிய படங்களை உருவாக்குவதில் பா.ரஞ்சித் போன்ற ஒருவரை இதற்கான தலைமையில் வைத்திருப்பது இன்னும் சுவாரஸ்யமானது.” என்று தெரிவித்தார்.
இந்த ஐந்து படங்களில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்களை படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர். மேலும், இந்த ஐந்து திரைப்படங்களும் உலகத்தரம் வாய்ந்த திரைப்படங்களாக உருவாகும் இந்த ஐந்து திரைப்படங்களையும் இரண்டு ஆண்டுகளுக்குள் முடித்து வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது.
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...