Latest News :

35 நாட்களில் முடிக்கப்பட்ட ‘கொஞ்சம் கொஞ்சம்’
Saturday September-16 2017

மிமோசா புரொடக்ஷன்ஸ் சார்பில்  பெட்டி சி.கே மற்றும் பி.ஆர். மோகன் தயாரித்துள்ள படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’. 

 

வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் 'கொஞ்சம் கொஞ்சம்' 

 

தன் அக்காளின் ஆசைக்காக தம்பி செய்கிற தியாகம் என்ன என்பதே கதை மையம் கொள்கிற பகுதி. இதன் விளைவுகள் பற்றிய பயணமே திரைக்கதையின் போக்கு. இக்கதைக்குள் காதல், நகைச்சுவை, பாசம் அனைத்தும் இயல்பாகக் கலந்து உருவாகியுள்ளது இப்படம்.

 

இப்படத்தை இயக்கியிருப்பவர் உதய் சங்கரன். பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸின் மாணவரான இவர்,  மலையாளத்தில் சுமார் 20 ஆல்பங்கள் இயக்கியுள்ளார். ஏற்கெனெவே தமிழில் 'விருந்தாளி' படம் இயக்கிய இவருக்கு இது இரண்டாவது படம்.

 

தமிழ் சினிமா ரசிகர்கள் திறமைகள் புதுமைகளை ஆதரிக்கவும் ஆராதிக்கவும் தவற மாட்டார்கள். அவர்களை நம்பியே தமிழில் படம் இயக்கியுள்ளதாகக் கூறுகிறார். இயக்குநர்.

 

படத்தின் நாயகனாக கோகுல், நாயகியாக நீனு நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் அப்புக்குட்டி வருகிறார். மேலும் ப்ரியா மோகன், மன்சூர் அலிகான், மதுமிதா, தவசி, சிவதாணு போன்றோரும் நடித்திருக்கிறார்கள். 

 

35 நாட்களில் முழுப்படத்தை முடித்துள்ளது படக்குழு வின் திட்டமிட்ட பணிக்கு சான்று எனலாம்.

 

பொள்ளாச்சி, தேனி, கேரளா எல்லைப் பகுதிகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கேரளா, தமிழ்நாடு என இரு மாநிலங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவ்விரு பிரதேசங்கள் வரும் போது காட்சிகள் வெவ்வேறு நிறத்தில் இருக்குமாம்.

 

படத்துக்கு ஒளிப்பதிவு பி.ஆர் நிக்கிகண்ணன். இவர் ராஜரத்னம் மற்றும் கே.வி.ஆனந்தின் உதவியாளர் .கலை- அபூ சஜன்.

 

இசை வல்லவன். பாடல்கள் அருண்பாரதி, தேன்மொழிதாஸ் மீனாட்சி சுந்தரம், வல்லவன். படத்தில் 6 பாடல்கள். வருகின்றன. நடனம்- தீனா. படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. 

 

அனைவருக்குமான ஒரு படமாக  உருவாகியுள்ள 'கொஞ்சம் கொஞ்சம்' வரும் 22-ல் வெளியாகிறது.

Related News

604

நடிகை அம்பிகாவை தேடும் ‘எல்லாம் நன்மைக்கே’ படக்குழு!
Saturday December-28 2024

80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...

நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த இளம் வயது உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
Saturday December-28 2024

இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...

விஜே பப்பு நாயகனாக நடிக்கும் மிஸ்டரி திரில்லர் இணையத் தொடர் ‘ராகவன் : Instinct' பூஜையுடன் தொடங்கியது
Saturday December-28 2024

’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன்  : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...

Recent Gallery