இசையமைப்பாளர்கள் சிலர் ஹீரோக்களாக உருவெடுத்து வரும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா, பிஸ்னஸ் மேனாக உருவெடுத்து வருகிறார். ஆனால், அவர் தொடங்கியிருக்கும் தொழிலும் சினிமாவை சார்ந்தது தான்.
ஏற்கனவே இசை நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் சினிமா பாடல்களை வெளியிடுவதோடு, தனி இசை ஆல்பங்களையும் தயாரித்து வரும் யுவன் ஷங்கர் ராஜா, தற்போது திரைப்பட விநியோக தொழிலிலும் ஈடுபட உள்ளார்.
கே பிலிம்ஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து இத்தொழிலில் ஈடுபட உள்ள யுவன் ஷங்கர் ராஜா, தனது பங்குதாரர் இர்பானுடன் இணைந்து ‘KYIT’ என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்நிறுவனத்தின் மூலம் தற்போது சில படங்களை விநியோகம் செய்ய உள்ள யுவன், விரைவில் பெரிய அளவில் திரைப்படங்களை விநியோகம் செய்ய உள்ளாராம்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...