கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் சுமார் 200 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. இதில் பல படங்கள் வெற்றி பெற்றாலும், சில படங்கள் எதிர்ப்பார்க்காத மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் நடித்த, அறிமுக இயக்குநர்கள் மற்றும் சிறு முதலீட்டு படங்களின் வெற்றி யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக அமைந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில், அப்படிப்பட்ட படங்களின் வரிசையில் முதல் படமாக ‘தொட்டு விடும் தூரம்’ படம் வெளியாக உள்ளது.
அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் ராஜ் ஹீரோவாக நடிக்க, மோனிகா சின்னகொட்லா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சீதா, சிங்கம் புலி, பாலசரவணன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
உஷா சினி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ராமநாதன் தயாரித்திருக்கும் இப்படம், தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘மைனா’ போன்ற படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் என்று விஜயின் ‘புலி’ படத்தை தயாரித்தவரும், பல சிறு முதலீட்டு படங்கள் வெளியாக உறுதுணையாக இருப்பவருமான தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிராமத்தில் இருந்து காதலியை தேடி வரும் காதலனின் ஒரு காதல் பயணம் சார்ந்த கதையம்சத்தைக் கொண்ட இப்படத்தில் காதலோடு, அம்மா, மகன் செண்டிமெண்டை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்களாம்.
பாலசரவணன், சிங்கம்புலி உள்ளிட்ட காமெடி நடிகர்களின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை ஒரு பக்கம் சிரிக்க வைத்தாலும், படத்தில் சமூகத்திற்கு தேவையான, முக்கியமான மெசஜ் ஒன்றையும் இயக்குநர் சொல்லியிருக்கிறாராம். அது என்ன என்பது தான் படத்தின் சஸ்பென்ஸ், என்று கூறிய இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன், ஹீரோ, ஹீரோயினுக்கான சந்திப்பு, அவர்களது காதல் பயணம் போன்ற விஷயங்கள் நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை தொட்டு விடும், அதே சமயம் படத்தில் சொல்லப்பட்டிருக்கும் மெசஜ் மற்றும் அதை சார்ந்து சொல்லப்பட்டிருக்கும் செண்டிமெண்ட், யாரும் எதிர்ப்பார்க்காத ஒன்றாக இருக்கும், என்றார்.
இப்படத்தை தயாரித்திருக்கும் பி.ராமநாதனுக்கு இது தான் முதல் படம். இவர் படம் தயாரித்ததே தனது நண்பருக்காக தான். ஆம், இயக்குநர் நாகேஸ்வரனும், தயாரிப்பாளர் ராமநாதனும் கல்லூரி நண்பர்களாம். கல்லூரியில் படிக்கும் போதே நாகேஸ்வரனுக்கு பல வகையில் உதவி செய்திருக்கும் ராமநாதன், சினிமாவிலும் நாகேஸ்வரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே இப்படத்தை தயாரித்தாராம்.
மேலும், இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோருக்கு அடையாளத்தை பெற்றுக் கொடுத்த ‘தென்மேற்கு பருவக்காற்று’ உள்ளிட்ட பல சிறு முதலீட்டு படங்களின் ரிலீஸுக்கு பக்கபலமாக இருந்த தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், இப்படத்தின் வெளியீட்டுக்கு உதவி செய்திருப்பதால், படத்தில் நிச்சயம் விஷயம் இருக்கும் என்று தெரிகிறது.
2020 ஆம் ஆண்டின் முதல் வெள்ளிக்கிழமை, ஜனவரி 3 ஆம் தேதி வெளியாகும் படம் என்ற பெருமையை பெற்றிருக்கும், ‘தொட்டு விடும் தூரம்’ ரசிகர்களிடம் வரவேற்பு பெறுவதோடு, அவர்களது தூக்கத்தையும் கெடுக்கும் ஒரு படமாக இருக்கும், என்று தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.
குடும்பத்தோடு பார்க்க கூடிய காதல் படமாக உருவாகியிருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ 2020 ஆம் ஆண்டின் தரமான படங்களின் வரிசையில் இடம் பிடிக்கும் முதல் படமாக இருக்கும், என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நோவா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ராம்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.ராம்பாதி பாடல்கள் எழுத, வீரசெந்தில் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, இளங்கோ சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். ஆர்.சுரேஷ் இணை தயாரிப்பை மேற்கொண்டிருக்கிறார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...