அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீட்டு தேதி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘மெர்சல்’, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பாகும். எனவே, இப்படத்தை அதிகமான பொருட்ச் செலவில் மிக பிரம்மாண்டமாக அந்நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியீடு குறித்த் பல தகவல்கள் தினசரி வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், டீசர் எப்போது வெளியிடப்படும் என்பதை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
வரும் தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்தின் டீசர் செப்டம்பர் 21 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இத்தகவலை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...