மத்திய அரசின் கல்வி நிறுவனமான ’இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் புட் பிராசசிங் டெக்னாலஜி’ (Indian Institute of Food Processing Technologh) கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த வருடத்திற்கான கலை நிகழ்ச்சி நேற்று தஞ்சையில் உள்ள ஐ.ஐ.எப்.பி.டி கல்லூரியில் நேற்று நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரிகள் என்று ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டார்கள். பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்பட்ட இவ்விழாவில், தமிழக பாரம்பரிய கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலைகள் தொடர்பாக மாணவர்கள் ஆட்டம், பாட்டு என்று அமர்க்களப்படுத்தினார்கள்.
ஐ.ஐ.எப்.பி.டி இயக்குநர் டாக்டர்.சி.அனந்தராமகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் டாக்டர்.வி.சந்திரசேகர் ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ‘களவாணி 2’ திரைப்பட இயக்குநர் சற்குணம் மற்றும் வில்லன் நடிகர் துரை சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
உணவு மற்றும் தானியங்களை பதப்படுத்துதல் மற்றும் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகள் சம்மந்தமான படிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் கல்வி நிறுவமனான ஐ.ஐ.எப்.பி.டி இந்தியாவில் புனே மற்றும் தஞ்சை என இரண்டு இடங்களில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...
அபிகா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ’துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ...
மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா...