மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வழக்கத்தை விட அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பத்திரிகைகளின் பாராட்டோடு ரசிகர்களுக்கு பிடித்த படமாகவும் ‘துப்பறிவாளன்’ அமைந்திருப்பதால், வசூல் ரீதியாக படத்தின் தயாரிப்பாளர் விஷாலுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும், திரையரங்கம் மற்றும் விநியோகஸ்தர்களும் இப்படத்தால் லாபம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘துப்பறிவாளன்’ வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் மற்றும் தனது நண்பர்களுக்கு நேற்று முன் தினம் விஷால் பெரிய அளவில் பார்ட்டி ஒன்று கொடுத்தாராம். நேற்று முன் தினம் இரவு ஆரம்பித்த பார்ட்டி மறுநாள் விடிய விடிய சென்றதாம்.
பார்ட்டியில் ரொம்ப சந்தோஷமாக இருந்த விஷால், ஏற்கனவே அறிவித்தது போல ‘துப்பறிவாளன் 2’ பாகத்தில் நடிப்பது உறுதி, கதையை ரெடி பண்ணுங்க என்று இயக்குநர் மிஷ்கினிடம் கூறியுள்ளாராம்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...