Latest News :

ரஜினி மகளின் இரண்டாவது திருமணம்! - சர்ச்சையை கிளப்பும் அரசியல் பிரமுகர்
Monday January-20 2020

தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்திய சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினியின் படங்கள் ரூ.300 கோடி வியாபாரம் செய்வதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பெருமை இந்திய சினிமா நடிகர்கள் வேறு யாருக்கும் இல்லை, என்றும் கூறுகிறார்கள். 70 வயதிலும் தனது சுறுசுறுப்பான நடிப்பு மூலம் ரசிகர்களை கவரும் ரஜினிகாந்த், விரைவில் அரசியலிலும் களம் இறங்கப் போகிறார்.

 

இதற்கிடையே, சில பொது நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த் பேசுவது பெரும் சர்ச்சையாக மாறிவிடுகிறது. அந்த வகையில், அவர் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகை விழாவில் பேசியதும் சர்ச்சையாகியுள்ளது.

 

இந்த நிலையில், பெரியார் குறித்து ரஜினி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக பிரமுகர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ரஜினி பொண்ணுக்கு இரண்டாவது கல்யாணம் யாரால் ஆச்சு? தன் குடும்பத்துக்கே சீர்திருத்தம் செய்தவர் பெரியார், வரலாறு தெரியாமல் ரஜினிகாந்த் பேசக்கூடாது” என்று பதிவிட்டுள்ளார்.

 

அவரது இந்த பதிவுக்கு பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

 

இவர்களின் பதிவு மற்றும் பதில் ஒரு பக்கம் இருக்க, இதில் தேவையில்லாமல், ரஜினி மகளின் திருமணம் குறித்து எதற்காக பேசுகிறார்கள், என்று நெட்டிசன்கள் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

 

Related News

6133

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...