ஹீரோவாக நடிக்கும் அனைவருக்கும் எப்படியாவது ஒரு முறை போலீஸ் வேடத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, அத்துடன் போலீஸ் வேடமும் கிடைத்தால், அதுவும் போலீஸ் அசிஸ்டண்ட் கமிஷனர் வேடம் என்றால், அவருக்கு அதுதானே ஜாக்பாட். அப்படிபட்ட ஜாக்பாட் சவுந்தரராஜனுக்கு அடித்துள்ளது.
ஹீரோவின் நண்பர், வில்லனின் நண்பர், ஹீரோயினின் சகோதரர் என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த சவுந்தரராஜா ‘அபிமன்யு’ படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்திருப்பதோடு, தனது முதல் படத்திலேயே போலீஸ் யூனிபார்மையும் அணிந்துள்ளார்.
இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை பல வகையில் தயார் படுத்திக்கொண்ட சவுந்தரராஜா, காக்கி சட்டையில் கம்பீரமாக வலம் வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையுடன் தயாராகும் அபிமன்யு படத்தை அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார். 'ஒருகிடாயின் கருணை மனு' படத்தின் ஒளிப்பதிவாளர் சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் தயாரிப்பு முன்னோட்டக்காட்சி சமீபத்தில் வெளியிடப்பட்டது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் முன்னோட்ட காட்சிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர் படக்குழுவினர். அவர்கள் ஆசைப்பட்டபடியே காவல்துறை உயர் அதிகாரி, அஸ்ரா கார்க், ஐ.பி.எஸ் (Asra Garg IPS) அபிமன்யு படத்தின் தயாரிப்பு முன்னோட்டக் காட்சியை வெளியிட்டு படக்குழுவினரை பெருமைப்படுத்தியுள்ளார்.
பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல்இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்திக்காட்டி பெருமைக்குரியவர், அஸ்ரா கார்க் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்...
திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர்...
செய்திகள், நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகளவில் டிஜிட்டல் மீடியாக்களை நோக்கி பயணப்பட்டாலும், அவை நம் அருகில் அல்லாத செய்திகளாகவோ, நிகழ்களாகவோ மட்டுமே இருக்கிறது...