Latest News :

உள்ளூரில் கிடைக்கும் உலகத்தர மியூசிக் ட்ராக்குகள்! - யாரிடம் இருக்கிறது தெரியுமா?
Thursday January-30 2020

தொழில்நுட்ப வளர்ச்சியால உலகம் நம் கையில் இருப்பது போல, சினிமா துறையிலும் பல்வேறு முன்னேற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், சினிமா இசைத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது ‘லேகா மியூசிக்ஸ்’.

 

பிரபல விளபர பட இயக்குநரான லேகா ரத்னகுமார், தலைவராக இருக்கும் ’லேகா மியூசிக்’ பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருப்பதோடு, உலகத்தரத்திலான மியூசிக் ட்ராக்குகளை முறைப்பாடியான அனுமதியோடு உள்ளூரிலேயே கிடைக்கும் வழியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

 

உலகின் புகழ் பெற்ற இசை நிறுவனங்கள் உருவாக்கிய 50 இலட்சம் இசை ட்ராக்குகள் இந்நிறுவனத்தில் தற்போது இருக்கின்றன. இவை அனைத்தும் முறைப்படி உரிமை பெற்றவை. இவை தவிர, தொடர்ந்து பல்வேறு நாடுகளில் உள்ள இசை நிறுவனங்கள் உருவாக்கும்இசைட் ராக்குகள் இந்நிறுவனத்தின் இசை பெட்டகத்தில் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இந்த இசை ட்ராக்குகளை இந்தியாவில் தயாராகும் திரைப்படங்கள், குறும்படங்கள், வெப்சீரியல்கள், விளம்பரப்படங்கள் ஆகியவற்றிற்கு முறையான உரிமை பெற்று அவற்றின் தயாரிப்பாளர்கள் அதற்கான தொகையைச் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

உலகநாடுகளின் இசையை இந்தியாவின் அனைத்து மொழி கலைபடைப்புகளுக்கும் பயன்படுத்தப்படுவதற்கான உரிமையைப் பெற்றிருக்கும் லேகா ரத்னகுமார், உலகமெங்கும் இந்திய இசையை அவரே உருவாக்கிகொண்டு செல்கிறார். இதன் மூலம் இந்திய இசையை உலகநாடுகள் பலவற்றிற்கும் அறிமுகம் செய்யும் மிகப்பெரிய காரியத்தை அவர் செய்துகொண்டிருக்கிறார்.

 

Lekha Rathnakumar

 

திரையரங்குகளில் திரையிடப்படும் திரைப்படங்கள் தவிர, வெப் உலகம், நெட்ஃப்ளிக்ஸ், ஸீ, அமேஸான், முகநூல் என்று கலைப்படைப்புகள் பல்வேறு ஊடகங்களிலும் இன்று உருவாகிக் கொண்டிருக்கின்றன. அதனால், இசையின் தேவை பல மடங்குகள் அதிகரித்திருக்கிறது.அந்த மாபெரும் தேவையை நூறு சதவிகிதம் நிறைவேற்றுவதற்காக இருக்கும் நிறுவனமும்‘லேகாம்யூஸிக்’என்று கூட கூறலாம். இதகைய உயர்தர உலக இசை ட்ராக்குகளுடன் இந்தியாவில் இருக்கும் ஒரே இசை நிறுவனம்‘லேகா மியூஸிக்’ தான்.

 

முறையான உரிமை பெறாமல், எங்கோ கிடைக்கக்கூடிய இசையை திரைப்படங்களிலோ வேறு பல கலைப்படைப்புகளிலோ யாராவது பயன்படுத்தினால், அதை யூட்யூப், முகநூல் ஆகியவை நிராகரித்துவிடுவதுடன், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனத்தையே அவற்றிலிருந்து நீக்கிவிடும். இந்நிலை வராமல் இருக்க வேண்டுமானால், முறைப்படி இசைக்கான உரிமையைப்பெற்று, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, அதை தங்களின் படைப்புகளில் தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டும்.‘லேகாமியூஸிக்’நிறுவனத்தின் இசையை பயன்படுத்துவது பாதுகாப்பானது, பிரச்சினை இல்லாதது. ‘லேகாமியூஸிக்’நிறுவனம் இந்தியாவிற்கான இசை உரிமை பெற்றிருக்கும் இசை நிறுவனங்களில் உலகப்புகழ் பெற்ற ஒரு நிறுவனம்‘சோனட்டான்’. ஜெர்மனியைச் சோர்ந்த அந்நிறுவனம் உருவாக்கிய இசை ட்ராக்குகள் சமீபத்தில் திரைக்கு வந்த பல ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

 

ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் Once upon a time in Hollywood, Ford Vs Ferrari, Spiderman, Far from Home, Rambo – Last Blood ஆகிய திரைப்படங்களிலும், Tolkien, Hellboy, Pet Sematary, Zombieland 2: Double Tap ஆகிய திரைப்படங்களிலும், ‘Sonoton'நிறுவனத்தின் இசை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவைதவிர‘Death Stranding'என்ற பல விருதுகளைப் பெற்ற வீடியோ கேமிற்கான இசையையும் இந்நிறுவனம் வழங்கியிருக்கிறது.

 

இந்த தகவல்களை நம்மிடம் கூறிய லேகா ரத்னகுமார்  "‘லேகாமியூஸிக்’ நிறுவனம் இந்திய படவுலகிற்கு கிடைத்திருக்கும் கொடை. புதுமைகளைப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் படவுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இளம் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முறையான உரிமை பெற்று நாங்கள் வைத்திருக்கும் உலக இசையை தங்களின் படைப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.அதன் மூலம் உலக நாடுகள் பலவற்றின் இசை ட்ராக்குகள் கொண்ட நம் கலைப்படைப்பு உலகத்தரத்தில் இருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?’ என்றார்.

 

Lekha Rathnakumar

 

‘லேகாமியூஸிக்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஒலிப்பதிவுக் கூடம் சென்னை போரூரில் இருக்கிறது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அங்கேயே வந்து தங்களின் படைப்புகளுக்கு ஒலிப்பதிவு செய்து கொள்ளலாம்.

 

‘லேகாமியூஸிக்’கின் இசையை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் 98411 25959, 98401 25959 என்ற அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

lrk@lekhamusic.com என்ற மின்அஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம்.

Related News

6167

எம்.ஜி.ஆர் முகத்தை மறைக்கும் நம்பியார் முகம் ! - கவனம் ஈர்க்கும் ‘வா வாத்தியார்’ டீசர்
Wednesday November-13 2024

’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...

Children's Day special: Here are some of the best picks for the kids on JioCinema!
Wednesday November-13 2024

Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் ‘பாராசூட்’ டீசர் வெளியானது!
Wednesday November-13 2024

முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...

Recent Gallery