Latest News :

’சைக்கோ 2’ கண்டிப்பாக வரும்! - உதயநிதி நம்பிக்கை
Sunday February-02 2020

‘சைக்கோ’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், சென்னையில் சமீபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இதில் இயக்குநர் மிஷ்கின், உதயநிதி, நித்யா மேனன், நடிகர்கள் சிங்கம்புலி, நரேன், நடிகை ரேனுகா, வில்லனாக நடித்த ராஜ்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டு, கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினார்கள்.

 

நிகழ்ச்சியில், பேசிய அனைவரும் படத்தின் எதிர்மறை விமர்சனமே, மக்களை படத்தை பார்க்க தூண்டியது என்றும், 50 சதவீதம் ஆதரவான விமர்சனங்களும், 50 சதவீதம் எதிரான விமர்சனங்களும் வேறு எந்த படத்திற்கும் வந்ததில்லை. சைக்கோ படத்திற்கு மட்டும் தான் அப்படி ஒரு விமர்சனம் வந்திருக்கிறது. அதுமட்டும் இன்றி, விமர்சனம் செய்தவர்களையே சிலர் விமர்சனம் செய்வதால், சைக்கோ அனைவரிடத்திலும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, என்று கூறினார்கள்.

 

Psycho Success Meet

 

மேலும், திரையரங்க உரிமையாளர் ஒருவர், ‘சைக்கோ’ படம் ரஜினியின் ’தர்பார்’ படத்தையே பின்னுக்கு தள்ளிவிட்டு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது, என்று தெரிவித்தார்.

 

நடிகர் உதய நிதி பேசுகையில், “வெற்றிப்படம் தந்து மூணு வருடம் ஆகிவிட்டது. இடையில் சில படங்கள் சரியாக போகவில்லை. அதெல்லாம் மோசமான படங்கள் இல்லை சுமாரான படங்கள் தான். இந்தப்படம் வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் ராஜ்குமார் தான் ஹீரோ, நான் ஏதோ கொஞ்ச நேரம் வந்து போகிறேன் அவ்வளவுதான். இந்தபடத்தில் பங்கு கொண்ட இளையராஜா சார், பி சி ஶ்ரீராம் சார் இருவருக்கும்  நன்றி.  நானும் மிஷ்கின் சாரும் முன்னாடியே படம் செய்ய வேண்டியது. அதன் பின்னால் நிறைய கதைகள் இருக்கிறது. இந்தப்படத்தில் அது  நடந்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தில் அனைவருமே உதவியாளர்கள்  போலவே வேலை செய்தார்கள். நடிகர் ராஜ்குமாரை முன்னால் இருந்தே தெரியும். என்னை விட இந்தப்படத்திற்காக அதிகம் உழைத்தது அவர்தான். அவருக்கு வாழ்த்துகள். நிறைய விமர்சனங்கள் வந்தது நல்லது. படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்தது சவாலாக இருந்தது. சைக்கோ 2 கண்டிப்பாக நடக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “’சித்திரம் பேசுதடி’ படம் முதல் இன்று வரை என்னை நல்ல படங்களில் ஆதரித்து மற்ற படங்களில் தலையில் குட்டி அரவணைக்கும் அனைவருக்கும் நன்றி. என் எல்லா வெற்றிகளுக்கும் காரணம் இளையராஜா சார் தான். என் எல்லா வெற்றிகளையும் அவருக்கு சமர்பிக்கிறேன். அவர் பாடல்கள் தான் சினிமாவுக்கு நான் வரக்காரணம். அவருக்கு என் நன்றி. என் தாய் வயிற்றில் பிறந்த தம்பியாக உதயை நினைக்கிறேன். என் சினிமா காதலை புரிந்து கொண்டு என்னை ஆதரித்து என்னுடன் பயணம் செய்துள்ளார். என் வாழ்வில் எப்போது கேட்டாலும் அவருக்கு படம் செய்வேன். என் தங்கையாக என்னை முழுமையாக புரிந்து கொண்ட நடிகை நித்யா மேனன் அவருக்கு இந்த வெற்றி காணிக்கை. என் எல்லா படங்களிலும் அவர் நடிக்க ஆசை. ரேணுகா மேடம் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் அவரை நிறைய கஷ்டப்படுத்தியுள்ளோம். ஆனால் அவர் ஒரு தேவதை. சிங்கம் புலி மிகச்சிறந்த மனிதர். அவரின் அனுபவங்களில் பாதி கூட எனக்கு இல்லை. ஆனால் என்னை பொறுத்து கொண்டு நடித்ததற்கு நன்றி. நான் கேட்டததற்காக நடித்த இயக்குநர் ராமுக்கு நன்றி. எப்போது கூப்பிட்டாலும் வரும் நடிகர் நரேனுக்கு நன்றி. என் எல்லா படங்களிலும் பாடல் எழுதுபவர் கபிலன். தயாரிப்பாளர் என்னிடம் கதையே கேட்கவில்லை என் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்தார். இந்தப்படம் வெற்றியடைய முக்கிய காரணம் அவர். எடிட்டர் 24 மணி நேரமும் என்னுடனேயே இருந்தார். இந்தியாவின் மிகச்சிறந்த எடிட்டராக வருவார். ராஜ்குமார் என் குழந்தை, இந்த ஐந்து வருடமாக என்னுடனேயே இருந்தவன். கண்ணியமாக சினிமாவை நேசித்தால், ஒரு நல்ல நடிகராக வர நினைத்தால், வெற்றி பெறுவாய் என்று சொன்னேன். அதைக் கேட்டு ஐந்து வருடம் என்னுடனேயே இருந்தான். நான் நினைத்ததை உடனடியாக செய்வான். அவனுக்கு கைமாறு செய்யவே இந்தப்படத்தை அவனுக்காக எழுதினேன். அவனுக்காக எடுத்தது தான் இந்தப்படம். இந்தப்படத்தில் அனைவர் மனதையும் கவர்ந்து விட்டான். பி சி ஶ்ரீராம் 10 நாள் என்னுடன் வேலை பார்த்தார், என் வாழ்நாள் கனவு. அவரால்  முழுதாக  வேலை செய்ய முடியவில்லை. தன்வீர் ஒளிப்பதிவாளனாக வேலை செய்தான். அருமையாக வேலை செய்துள்ளான். அதிதி கூட  எப்போதும் சண்டை தான். பயங்கரமாக சண்டை போட்டிருக்கிறேன். ஆனால் அவர் நடிப்பு பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என் வாழ்த்துகள். இந்தப்படம் பிடிக்காதவர்களுக்கும், விமர்சனம் செய்தவர்களுக்கும் நன்றி. படம் பார்த்திருக்கிறீர்கள் எல்லோரது அன்புக்கும் நன்றி.” என்றார்.

 

Psycho Success Meet

 

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் பேசுகையில், “பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்லவே இந்த நிகழ்வு. இந்த படத்தை உதயநிதி நினைத்திருந்தால் அவரே தயாரித்திருக்கலாம், எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இப்படத்தை அழகாக வடிவமைத்து எடுத்ததற்கு மிஷ்கின் அவர்களுக்கு நன்றி. படத்தில் நடித்து பங்காற்றிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நிகழ்ச்சியில் ‘சைக்கோ’ குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.

 

Psycho Success Meet

Related News

6176

எம்.ஜி.ஆர் முகத்தை மறைக்கும் நம்பியார் முகம் ! - கவனம் ஈர்க்கும் ‘வா வாத்தியார்’ டீசர்
Wednesday November-13 2024

’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...

Children's Day special: Here are some of the best picks for the kids on JioCinema!
Wednesday November-13 2024

Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் ‘பாராசூட்’ டீசர் வெளியானது!
Wednesday November-13 2024

முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...

Recent Gallery