வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள படம் ‘சீறு’. ரத்ன சிவா இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜீவா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்திருக்கிறார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண், காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாக உள்ள ‘சீறு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், ஜீவா, ஐசரி கே.கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ், “’சீறு’ எங்கள் நிறுவனத்தின் 4 வது படம். கடந்த வருடம் மூன்று படங்கள் ஹிட்டாக அமைந்தது. இந்தப்படமும் ஹிட்டாக அமையும். என் பள்ளியில் ஜீவாவின் மகன் படிக்கிறார். அவருடன் படம் செய்யலாம் என்று அங்கு சந்திக்கும்போது சொன்னேன். அவர் இயக்குநர் ரத்ன சிவாவை அனுப்பி வைத்தார். எங்கள் நிறுவனத்தில் கதை இலாக இருக்கிறது. அவர்கள் கதை கேட்டார்கள், அவர்கள் அனைவருக்கும் கதை பிடித்து இருந்தது. அவர் சொன்ன மாதிரியே படத்தை எடுத்து தந்துள்ளார். என் படமாகவே இருந்தாலும் நல்லா இல்லை என்றால் சொல்லிவிடுவேன். ஆனால் இந்தப்படம் என்னை பாதித்தது. அருமையாக எடுத்திருக்கிறார். ஜீவா கடுமையாக உழைத்து நடித்துள்ளார். வருண் இந்தப்படத்தில் தன்னை மாற்றி நடித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். நல்ல தரமான படங்களை தர வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள். நாங்களே இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறோம். இந்தப்படம் கண்டிப்பாக தரமான படமாக இருக்கும். எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இந்தபடம் உள்ளது.” என்றார்.
ஜீவா பேசுகையில், “ரொம்ப சந்தோஷமாக இருக்கு. படத்தை எடுப்பதை விட அதை கொண்டு சேர்ப்பது இன்றைய காலகட்டத்தில் பெரிய வேலை. இங்கு நிறைய படத்திற்காக வந்துள்ளேன் படம் நல்லா இல்லை என்றால் தர்மசங்கடமாக இருக்கும். ஆனால் இன்று மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுற்றி நிறைய நல்ல விசயங்கள் நடக்கிறது. இந்தப்படத்தில் கேபிள் டீவி ஆப்ரேட்டராக, துள்ளலான இளைஞனாக நடித்திருக்கிறேன். திரைக்கதை அட்டகாசமாக இருக்கிறது. இயக்குநருக்கு பயங்கரமாக கதை சொல்லும் திறமை இருக்கிறது. அவர் யாரிடம் வேண்டுமானாலும் கதை சொல்லி ஓகே வாங்கி விடுவார். அவ்வளவு திறமையானவர். இந்தப்படம் ஒரு பக்காவான கமர்ஷியல் படம். எல்லாவிததத்திலும் அனைவரையும் சந்தோஷப்படுத்தும் படமாக இருக்கும். 83 பட புரமோஷனில் கச்சேரி, கச்சேரி பாடல் ரன்வீர் கேட்டு வாங்கி ஆடினார். இமான் சார் பாடல்கள் பற்றி அவர் பெருமையாக பேசினார். இந்தப்படத்தில் வா வாசுகி எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப்படத்திற்கு இமான் பெரும் பலமாக இருக்கிறார். சாந்தினி காட்சிகள் அருமையாக இருந்தது. அவர் அற்புதமாக நடித்துள்ளார். இந்தப்படம் வேல்ஸ் ஃபிலிம்ஸ்ல் நடித்தது எனக்கு சந்தோஷம். இன்னும் நிறைய படங்கள் உங்களுடன் செய்ய வேண்டும். வருண் நடித்த ரோலில் முதலில் நானே அவரை வேண்டாம் என்று சொன்னேன். கரடு முரடான கேரக்டர் ஆனால் கடுமையாக உழைத்து அசத்திவிட்டார். ரியா சுமன் ஜிப்ஸிக்கு ஆடிசன் செய்திருந்ததாக என்னிடம் சொன்னார். ஆனால் அந்தபடம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை, இது தான் முதலில் ரிலீஸ் ஆகிறது. இந்தப்படத்தில் அனைத்து அம்சங்களும் கலந்து இருக்கிறது. அனைவருக்கும் பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் ரத்ன சிவா பேசுகையில், “இது மூன்றாவது படம். முதலில் அஷ்வினுடன் கதை சொன்ன போது எந்த ஹீரோவை வைத்து செய்யலாம் என பேசினோம். ஒரு ஆக்ஷன் ஹீரோ வேண்டும் என்று ஜீவாவிடம் போனேன். கதை கேட்டவுடன் நாம் பண்ணலாம் என்று சொன்னார். ஐசரி கணேஷ் சாரிடம் கதை சொல்ல பயமாக இருந்தது. ஆனால் அவர் கதை கேட்டு இது ஹிட்டாகும் என்றார். எளிதில் எந்த ஒரு விசயத்தையும் தீர்மாணிப்பவராக அவர் இருக்கிறார். அஷ்வின் மொத்த படத்திற்கும் மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். நான் ஜீவா சாரின் ரசிகன். 24 மணி நேரமும் சிரித்துகொண்டே, அருகில் இருக்கிறவர்களையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். சீரியஸ் காட்சி வந்துவிட்டால் அப்படியே மாறிவிடுவார். அவர் ஒரு அருமையான நடிகர். அவருக்கு நன்றி. வருண் ஜெயிக்க வேண்டும் என்பதற்கு வெறியாக உழைக்க தயாராக இருக்கும் ஆள். இந்த கேரக்டருக்கு நியாயம் செய்ய மொத்தமாக உடலை மாற்றி வந்தார். மிகப்பெரிய நடிகராக வருவார். சாந்தினி முதலில் நடிக்க மறுத்தார் ஆனால் கதை கேட்ட பிறகு நடிக்க ஒத்துக்கொண்டார். இந்தப்படத்தில் எல்லோர் மனதிலும் கண்டிப்பாக நிற்பார். இமான் சார் இந்தப்படத்திற்கு மிகப்பெரிய பலம். அவர் யாருடன் படம் செய்தாலும் கண்டிப்பாக வெற்றிப்பாடலாகத் தான் இருக்கும். என் தொழில்நுட்ப கலைஞர்கள் என் நண்பர்கள் போன்றவர்கள், கடுமையாக உழைத்துள்ளார்கள். ஹீரோயினுக்கு தமிழ் தெரியாது. ஆனால் அருமையாக நடித்துள்ளார். வா வாசுகி பாடல் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்தப்படம் வரும் 7 ஆம் தேதி வருகிறது. இந்தப்படம் நல்ல கருத்துள்ள படம்.” என்றார்.
நடிகர் வருண் பேசுகையில், “இந்தப்படத்தில் மல்லி எனும் கதாப்பாத்திரம் செய்துள்ளேன். இயக்குநர் சொன்ன மாதிரி வெயிட் போட்டு உடலை மாற்றி நடித்துள்ளேன். ஜீவாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பார்த்தால் மல்லி பாத்திரம் கண்டிப்பாக உங்கள் மனதில் இடம் பிடிக்கும் பாத்திரமாக இருக்கும்.” என்றார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...