கமல், ரஜினி போன்றவர்கள் எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலுக்ம் பங்கேற்காமல் இருந்த நிலையில், அவர்களது அத்தகைய மன உறுதியை உடைத்து கமல்ஹாசனை தங்களது விருது நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்த விஜய் டிவி, தொடர்ந்து தங்கள் சேனலின் பல நிகழ்ச்சிகளிலுக் கமலை பங்கேற்க வைத்து, இனி உலக நாயகன் எங்களுக்கு தான் சொந்தம், என்ற ரீதியில் மார் தட்டியது.
அதற்கும் மேலாக, கமல்ஹாசனை தொகுப்பாளராக போட்டு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தமிழில் தொடங்கிய விஜய் டிவி, எவரஸ்ட் சிகரத்தையே தங்கள் அலுவலகத்திற்கு அழைத்து வந்தது போல பெருமைப்பட்டுக்கொண்டது. ஆனால், விஜய் டிவி-யின் இந்த பெருமை நிலைக்காமல் போய்விடும் அளவுக்கு தற்போது கமல்ஹாசனின் செய்கை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து டிஸ்கன் நடத்துவதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசனுக்கு அறை புக் செய்யப்பட்டதாம். வாரம் இரண்டு நாட்கள் இங்கு அமர்ந்து தான் பிக் பாஸ் குழுவினர் நிகழ்ச்சி குறித்து பேசுவார்களாம்.
இந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் போது போடப்பட்ட அறையை கமல்ஹாசன் இன்னும் காலி செய்யவில்லையாம். மாறாக அவரது வீட்டை காலி செய்துவிட்டாரோ! என்று நினைக்க தோன்றும் அளவுக்கு எந்நேரமும் அந்த நட்சத்திர ஓட்டல் அறையிலேயே இருப்பவர், அங்கு செய்யும் செலவுகளின் பில்லையும் விஜய் டிவி-க்கே அனுப்புகிறாராம்.
இப்படி தினமும் கமல்ஹாசன் அனுப்பும் பில்லை செட்டில் செய்யும் விஜய் டிவி, “இது தாங்காது சார்...விட்ருங்க...” என்று அவரிடம் சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் உள்ளுக்குள் கதறிக்கொண்டிருக்கிறதாம்.
80-களின் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்த நடிகை அம்பிகா, தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நிலையில், அவரது முகத்தோற்றம் கொண்ட ஒரு நடிகையை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழு ஒன்று முயற்சித்து வருகிறது...
இளம் வயது உலக செஸ் சாம்பியனான குகேஷ், நேற்று நடிகர் சிவகார்த்திகேயனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்...
’வேற மாரி ஆபிஸ்’, ‘வேற மாறி லைவ் ஸ்டோரி’ தொடர்கள் மற்றும் ‘மால்’, தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த விஜே பப்பு, ‘ராகவன் : Instinct’ என்ற இணையத் தொடர் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்...