மருத்துவகழிவுகளால் மக்கள் பாதிக்கப்படுவதை வெளியுலகிற்கு சொல்லும் படமாக உருவாகியுள்ளது ‘கல்தா’. மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராதாரவி, இயக்குநர் லெனின் பாரதி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி, “’கல்தா’ படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். இந்தப்படம் நன்றாக இருக்கும் என டிரெய்லரிலேயே தெரிகிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். அருமையான நடிகர். தயாரிப்பாளர்களை அணுசரித்து செல்லுங்கள். நீங்கள் சிறப்பாக வர வேண்டும். இசையமைப்பாளர் அற்புதமாக இசையமைத்துள்ளார். இப்போது படம் எடுப்பதற்கு பயமாக இருக்கிறது. படம் எடுத்து கடனாளியாக மாறினேன். இப்போது படம் எடுப்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். ஹீரோயின் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் அழகாக தமிழ் பேசுகிறார். அவருக்கு வாழ்த்துகள். இயக்குநருக்கு வாழ்த்துகள் சமூக பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ளார். இந்தப்படம் நன்றாக ஓட வேண்டும். சகோதரர் லெனின் பாரதி இங்கு வந்துள்ளார், சின்ன படம் எடுத்து ஜெயிப்பது எப்படி என்று நிரூபித்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள். மக்கள் மாற வேண்டும். மக்கள் மாறாத வரை எதுவும் மாறாது. அதைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் படும் கஷ்டம் யாருக்கும் தெரியாது. அவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். மக்கள் பார்த்து பாராட்டினால் கண்டிப்பாக படம் ஜெயிக்கும்.” என்றார்.
நடிகர் ஆண்டனி பேசுகையில், “’மேற்கு தொடர்ச்சி மலை’ படத்தை நீங்கள் தான் ஜெயிக்க வைத்தீர்கள். அந்தப்படம் தான் என்னை பல கல்லூரிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து சென்றது. சம்பாதிப்பதை விட கிடைத்திருக்கும் மரியாதையை கெடுத்து விடக்கூடாது என நினைத்தேன். மேற்கு தொடர்ச்சி மலைக்கு பிறகு இந்தப்படம் தான் நடித்துள்ளேன். ஹீரோ கடுமையாக உழைத்துள்ளார் அவர் நன்றாக வர வாழ்த்துகள். படம் பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.” என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில், “கலை என்பது மக்களுக்கே என மாவோ சொல்லியுள்ளார். ஹீரோவை கொண்டாடும் சினிமாவில் இப்படி சமூக பிரச்சனை பேசிய குழுவுக்கு வாழ்த்துகள். அரசியல் என்பது மக்களை மிரட்டும் கருவி என்கிறார் லெனின். இப்போது அரசியலில் மதமும் கலந்து பயமுறுத்துகிறது. அரசு என்பது மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் ஒரு அமைப்பு. இந்த அறிவு மக்களுக்கு இல்லையெனில் நாடு கெட்டுப்போகத்தான் செய்யும். அரசியலை மக்கள் பழகினால் மட்டுமே மாற்றம் வரும்.” என்றார்.
இயக்குநர் ஹரி உத்ரா பேசுகையில், “’கல்தா’ எனது மூன்றாவது திரைப்படம். மருத்துவ கழிவுகள் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்தப்படம் செய்துள்ளோம். பல தயாரிப்பாளர்களிடம் சென்றது. எல்லோரும் கிண்டல் செய்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் ரகுபதி என்னை நம்பி தயாரித்துள்ளார். “மேற்கு தொடர்ச்சி மலை” ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகனா நடித்திருக்கிறார்கள். ஐரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடிச்சிருக்கிறார்கள். வைரமுத்து சார் இதில் பாடல்கள் எழுதியிருக்கார். ஜெய் கிரிஷ் இசையமைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல் தான். அரசியல்வாதிகள் தொடர்ச்சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க அதை அடிப்படையா கொண்டுதான் இந்த டைட்டில் வைத்தோம். அரசியல் பழகு அப்படிங்கிறது தான் இந்தப்படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல்பான படமா இத உருவாக்கியிருக்கோம். இந்தப்படத்தை எடுத்த இடங்களில் மக்களின் ஆதரவு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. நிஜத்தில் இங்க நடந்துட்டு இருக்குற சம்பவங்கள மையமா வச்சு தான் இந்தப்படம் உருவாகியிருக்கு. இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கிற வகையில் இருக்கும். இம்மாதம் படம் வெளியாகிறது. இப்படம் உருவாக ஆதரவாக இருந்த படக்குழு அனைவருக்கும் என் நன்றிகள்.” என்றார்.
இயக்குநர் பாக்கியராஜ் பேசுகையில், “நல்ல கருத்துள்ள படத்தை எடுக்க இவர்கள் துணிந்திருப்பதே நல்ல விசயம் தான். அரசியல் பழகு என டைட்டிலில் சொல்கிறார்கள் அது அவ்வளவு எளிதல்ல. எம் ஜி ஆர் இறந்த நேரம் என்னை பலரும் அரசியலில் இறங்க சொன்னார்கள். பலர் நீங்கள் ஜெ பக்கம் இணைந்திருக்க வேண்டும், இது கூடவா உங்களுக்கு தெரியாது. ஜெயிக்கும் பக்கம் இணைவதே அரசியல் என்றார்கள். சாதரணமானவர்களுக்கு அரசியல் வராது. ஆனால் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும். இந்தபடத்தில் நல்ல கருத்துக்களை கூறியுள்ளார்கள். படத்தின் காட்சிகள் நன்றாக இருக்கிறது. ஹீரோ அழகாக இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் ரகுபதி பேசுகையில், “எல்லோரும் இணைந்து ஒரு நல்ல படத்தை தயாரித்துள்ளோம். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும்.” என்றார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...