Latest News :

ஸ்டண்டர்ட் பட்டாசு விழாவில் பங்கேற்ற நட்சத்திரங்கள்!
Monday July-17 2017

பட்டாசு பிரியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளியை ரொம்பவே ஸ்பெஷலாக்கியுள்ளது ஸ்டண்டர்ட் பட்டாசு நிறுவனம்.

 

தீபாவளி மட்டுமல்ல எந்த நிகழ்வாக இருந்தாலும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் மக்களுக்காக குறைந்த விலையில், பல வகைகள் கொண்ட அசத்தலான பட்டாசு கிப்ட் பாக்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது ஸ்டண்டர்ட் நிறுவனம்.

 

உலக அளவில் முன்னணி பட்டாசு தயாரிப்பு நிறுவனமான ஸ்டண்டட் கிராக்கர்ஸ் (Standard Crackers) தனது 75 வது பிளாட்டினம் ஆண்டை முன்னிட்டு அறிமுகப்படுத்தியுள்ள இந்த கிப்ட் பாக்ஸில் 24 விதமான பட்டாசுகள் இருப்பதோடு, 200 ரூபாய் முதல் 3800 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன.

 

இந்த புதிய பட்டாசு கிப்ட் பாக்ஸ் அறிமுக நிகழ்ச்சி ஜூலை 15ஆம் தேதி, சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில், ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடு கோலாகலமாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

எளியவர்களுக்கும் ஏற்ற வகையில், மலிவான விலையில் SFI அறிமுகப்படுத்தியுள்ள் இந்த பட்டாசு கிப்ட் பாக்ஸை, தமிழ்நாடு பட்டாசு நிறுவனம், SFI உடன் இணைந்து தமிழகம் முழுவதும் சந்தைப்படுத்துகிறது.

Related News

63

‘மட்கா’ படத்திற்காக ரூ.15 கோடியில் உருவாக்கப்பட்ட பழமையான வைஸாக் நகரம்!
Friday June-28 2024

கருணா குமர் இயக்கத்தில், வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படம் ‘மட்கா’...