விக்ரம் - தமன்னா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள ‘ஸ்கெட்ச்’ வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படமாகும். வட சென்னை கதைக்களமாக இருந்தாலும், தமிழ் சினிமாவில் இதுவரை காட்டாத ஒரு வட சென்னையை இப்படத்தில் பார்க்கலாம். அதாவது, வட சென்னை என்றாலே ரவுயிசம், வெட்டு குத்து என்று மட்டுமே சினிமாவில் காட்டப்பட்டு வரும் நிலையில், அங்கேயும் டாக்டருக்கும், இன்ஜினியரிங்கிற்கும் படிக்கும் இளைஞர்கள் உண்டு, அங்கேயும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மக்கள் உண்டு என்பதை இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம் நிறுவனம் சார்பில் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் இடம்பெற்றுள்ள “அச்சி புச்சி ஸ்கெட்சு” என்ற பாடல் பிரம்மாண்டமான அரங்கத்தில் 150 நடன கலைஞர்கள் மற்றும் 1500 துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டது.
எஸ்.எஸ்.தமன் இசையமைப்பில், கபிலன், விவேக், விஜய்சங்கர் ஆகியோரது பாடல் வரிகளில் உருவாகும் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரூப படத்தொகுப்பு செய்கிறார். மாயா பாண்டியன் கலையை நிர்மாணிக்க, பிருந்தா, தஸ்தாகீர் நடனம் அமைக்கின்றனர். சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் ஆகியோர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்சந்தர் இயக்குகிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...