திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன், வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்திவலும் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரம் காட்டி வருகிறார்.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் ரஹ்மான், லண்டனில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் இந்தி பாடல்களை விட தமிழ் பாடல்கள் அதிகமாக இடம்பெற்றதால், இந்தி பேசும் ரசிகர்கள் அதிருப்தியுற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்கள். மேலும், தங்களுடைய அதிருப்தியை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டார்கள்.
இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டதால், ஏ.ஆர்.ரஹ்மான் பெரும் கவலை அடைந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே, இனி இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் தமிழ் மற்றும் இந்தி பாடல்களை ஒன்றாக பாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ள ரஹ்மான், அக்டோபர் மாதம் கனடாவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் இது தொடர்பாக புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
அதாவது, கனடாவில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியை இரண்டாக பிரித்துள்ளார். ஒன்றில் தமிழ் பாடல்களும், மற்றொன்றில் இந்தி பாடல்களும் பாடப்போவதாக தெரிவித்துள்ள ரஹ்மான், இந்த தகவலை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...