நடிகை பாவனா கடத்தி கற்பழிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப், அம்மாநில ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜாமீன் கேட்டு அங்கமாலி நீதிமன்றத்திலும், கேரள உயர் நீதிமன்றத்திலும் திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யபப்ட்டது.
இந்நிலையில், 2 மாத சிறைவாசத்திற்கு பிறகு சமீபத்தில் அவரது தந்தை நினைவு நாளின் போது பரோலில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து 4-வது முறையாக திலீப் தாக்கல் செய்த ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...