‘நானும் ரவுடி தான்’ படப்பிடிப்பின் போது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்ட நயந்தாரா, தனது காதலருக்கு வீடு, BMW கார் என்று பரிசுகளைக் கொடுத்து தனது அன்பால் கட்டிப்போட்டார். தற்போது இவர்களது காதல் விவகாரம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், அறியாத ஒன்று, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வாய்ப்பை விக்னேஷுக்கு பெற்றுக் கொடுத்ததே நயன் தானாம்.
செய்தி அதுவல்ல, இயக்குநர் விக்னேஷ் சிவன், இன்று தனது 33 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு நடிகர் சூர்யா மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்து கூறி வர, விக்னேஷ் சிவனோ அமெரிக்காவில் தனது காதலியுடன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறாராம். இந்த அமெரிக்க பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான முழு ஏற்பாட்டையும் நயந்தாரா தான் செய்துள்ளாராம்.
காதலிக்கு காதலன் செலவு செய்வது தான் வழக்கம். ஆனால், நயந்தாராவை பொறுத்தவரை அவர் காதலிக்கும் காதலர்கள் அனைவரும் லாட்டரியில் பரிசு அடித்தது போல அவ்வபோது பரிசு மழையில் நனைவதுண்டு.
தனது காதலை ஏற்றுக்கொண்ட விக்கிக்கு விலை உயர்ந்த கார், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு என்று வாங்கிக் கொடுத்த நயந்தாரா, பிறந்தநாளுக்கு என்ன பரிசு கொடுத்திருப்பார், என்று கோடம்பாக்கமே யோசித்துக் கொண்டிருக்க, அவரோ தன்னையே கொடுத்துவிட்டேன், என்ற ரீதியில் அமெரிக்காவின் ப்ருக்லின் பாலத்தில் நின்று ஜோடியாக சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...