நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு டிவிட்டரில் ரொம்ப ஆக்டிவாக இருக்க கூடியவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிவிட்டரில் இருந்து விலகிய குஷ்பு, இன்று காலை மீண்டும் ட்வீட் செய்ய தொடங்கியுள்ளார். அவர் இன்று காலை போட்ட ட்வீட் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
பல காலமாக நிறைவேறாத என் கனவு இன்னும் சில நிமிடங்களில் நிறைவேறப் போகிறது. என் இதயம் சப்தமாக துடிப்பது எனக்கே கேட்கிறது. வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன. சந்தோஷமாக உள்ளது என்று அவர் ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அது என்ன கனவாக இருக்கும், என்று தெரிந்துக் கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டியதோடு, அதை குஷ்புவிடமே பலர் “என்ன கனவு மேடம்” என்று கேட்க தொடங்கிவிட்டார்கள். பலர் அரசியல் குறித்த கனவா? என்று கேட்க, சிலர் “ஹாலிவுட்டுக்கு போகிறீர்களா?” என்று கேட்டார்கள்.
அத்தனை கேள்விகளுக்கும் மவுனம் சாதித்த குஷ்பு, முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரியுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, “என் கனவு நிறைவேறிவிட்டது. ஒரு வழியாக என் ஹீரோ ரவிசாஸ்திரியை சந்தித்தேன். அவரை சந்திக்க 33 ஆண்டுகள் காத்திருந்தேன்.” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...
ஸ்கை வண்டர்ஸ் எண்டர்டெயின்மென் நிறுவனத்தின் சார்பில், ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது...
தமிழ் சினிமாவில் நெஞ்சை தொட்ட காதல் காவியமாக 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் '7ஜி ரெயின்போ காலனி' ...