கொரோனா பாதிப்பால் உலகமே ஸ்தம்பித்திருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி பல பிரபலங்கள் உயிரிழந்து வருகிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் நடிகர்கள், நடிகைகள் உயிரிழப்பு தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில், மலையாள சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான எம்.கே.அர்ஜுனன் இன்று உயிரிழந்தார். கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், இசையமைப்பாளர் அர்ஜுனனின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், 83 வயதாகும் அர்ஜுனன் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நிலை குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வருடங்களாக கேரள சினிமாவில் இசையமைப்பாளராக பயணித்து வந்த அர்ஜுனன், சுமார் 200 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரிடம் தான் ஏ.ஆர்.ரஹ்மான் முதன் முதலில் கீ போர்ட் கலைஞராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் அர்ஜுனனின் மறைவுக்கு மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்திய சினிமாவின் முன்னணி ஒலி வடிவமைப்பாளரான ரசூல் பூக்குட்டி அர்ஜூனனின் மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதோ அவரது இரங்கல் பதிவு,
My heartfelt condolences .... many of your tunes are etched in my memory, your artistry has shaped up many generations of music lovers! Your absence is a vacuum.... RIP 🙏🙏🙏 pic.twitter.com/evcSuuCa7M
— resul pookutty (@resulp) April 6, 2020
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...