விஷாலை வைத்து மிஷ்கின் இயக்கியுள்ள ‘துப்பறிவாளன்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், ‘துப்பறிவாளன் 2’ மூலம் மீண்டும் மிஷ்கினுடன் இணையப் போவதாக விஷால் அறிவித்துள்ளார். இந்த நிலையில், மிஷ்கின் சாமியாராகி விட்டார்.
‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிக்க உள்ள இயக்குநர் மிஷ்கின், தனது சாமியார் வேடத்தை இப்படத்திற்காக தான் போட்டுள்ளாராம்.
சமீபத்தில் இந்த வேடத்திற்காக மிஷ்கினுக்கு மேக்கப் டெஸ் எடுக்கப்பட்டதாம். இதில் சாமியாராக மிஷ்கின் கச்சிதமாக பொருந்தினாராம்.
ஷில்பா என்ற அரவாணி வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் பகத் பாசில், நதியா, சமந்தா, காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...