விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இப்போட்டியின் இறுதிக்கட்டம் நெருங்க நெருங்க, அங்கிருக்கும் போட்டியாளர்களுக்கிடையே, எப்படியாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டுள்ளது. அதிலும் பாடலாசிரியர் சினேகனுக்கு வெறி பிடித்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு மற்ற போட்டியாளர்களுடன் அவர் மிக கடுமையாக நடந்துக்கொள்கிறார்.
பிக் பாஸின் வெற்றி தொகையான ரூ.50 லட்சத்தை பெறுவதற்காக சினேகன், தனது சக போட்டியாளர்களை பெண் என்றும் பாராமல் அடிக்க செல்வதும், அவர்களை கீழே தள்ளிவிடுவதும் என்று மிகவும் ஆக்ரோஷமாக நடந்துக்கொள்ளும் செயல், பிக் பாஸ் வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த டாஸ்க் போட்டியில் ஹாரிஸ் மற்றும் சுஜாஐ மிக கேவலமாக தள்ளிவிட்டு அடித்து மிக கடுமையாக நடந்துக்கொண்ட சினேகன் மீது ரசிகர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இப்படியே சினேகன் நடந்துக் கொண்டால், போட்டியின் இறுதி நாளில் யாரையாவது எதாவது செய்தாலும் செய்துவிடுவார், என்று அஞ்சும் அளவுக்கு அவரது செயல்கள் மிக கடுமையாக இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...