கொரோனா பாதிப்பால் திரைப்பட தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரபலங்கள் பலர் சினிமா தொழிலாளர்களுக்கும், நலிவடைந்த நடிகர், நடிகைகள் மற்றும் நாடக நடிகர்களுக்கும் உதவி செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், 2020-2022 ஆண்டுக்கான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட சங்க அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான 10 a.m. முதல் 6 p.m. வரை நேரில் வந்து பெற்று கொள்ளலாம். (Black & white address book Rs. 500/-, colour address book Rs. 2000/-)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டிற்கான தேர்தல் வருகிற ஜூன் 21ம் தேதி (21.06.2020) நடைபெறவுள்ளது. அதற்கான அட்டவணை உறுப்பினர்கள் கவனத்திற்கு தெரிவித்து கொள்கிறோம்.
1. 11.05.2020 காலை 10 மணி முதல் 14.05.2020 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுகான விண்ணப்பங்கள் சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். (ரூ.100 செலுத்தி உறுப்பினர்கள் பெற்றுக்கொள்ளலாம்).
2. 14.05.2020 மாலை 5 மணிக்கு மேல் விண்ணப்பங்கள் வழங்கப்பட மாட்டாது.
3. 15.05.2020 காலை 10 மணி முதல் 19.05.2020 மாலை 4 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை சங்க அலுவலகத்தில் மூடி முத்திரை வைக்கப்பட்டுள்ள பெட்டியில் சேர்த்துவிட வேண்டும். (விண்ணப்ப படிவங்களை தபால் அல்லது courier-ல் அனுப்பும் உறுப்பினர்கள் 19.05.2020 மாலை 4 மணிக்ககுள் சங்க அலுவலகத்திற்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்படுகிறது)
4. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சங்க அலுவலகத்தில் உள்ள மூடி முத்திரையிட்ட பெட்டியில்
19.05.2020 மாலை 5 மணிக்கு சீல் வைக்கப்படும்.
5. 20.05.2020 காலை 10 மணி முதல் 24.05.2020 மாலை 4 மணி வரை வேட்புமனு விண்ணப்பங்களை திரும்ப பெற்று கொள்ளலாம். மாலை 4 மணிக்கு மேல் விண்ணப்பங்களை திரும்ப பெற இயலாது.
6. 24.05.2020 அன்று மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
25.05.2020 அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் தேர்தலில் வாக்களிக்கும் தகுதிப்பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் தபால் அல்லது courier மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் 21.06.2020 அன்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
பின்னர் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
கொரணா வைரஸ்(COVID-19) ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் தேர்தல் நடைபெறும் இடம் விசாரிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும்.
தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்களுக்கான கட்டண விவரம் பின்வருமாறு....
தலைவர் பதவிக்கு - ரூ. 1,00,000/- (ரூ.ஒரு லட்சம் மட்டும்)
மற்ற நிர்வாகிகள் பதவிக்கு - ரூ. 50,000/- (ரூ.ஐம்பதாயிரம் மட்டும்)
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு - ரூ. 10,000/- (ரூ.பத்தாயிரம் மட்டும்)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 மைல்ஸ் ஃபேர் செகண்ட் ( 7 MILES PER SECOND) நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், இயக்குநர் என்...
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...