Latest News :

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் கோரிக்கை
Monday May-04 2020

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருப்பது போல சினிமா துறையும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், அத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மட்டும் இன்றி முதலாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதற்கிடையே, ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில கடைகளை திறக்கவும், சில தொழில் நிறுவனங்களை இயக்கவும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

 

இதேபோல், திரைப்பட துறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த வேண்டும் என்று பெப்ஸி அமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்றாலும், திரைப்பட பின்னணி வேலைகளான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்த கோரிக்கை மனுவை தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், மனோபாலா, டி.சிவா, திருமலை ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இன்று நேரில் வழங்கினார்கள்.

 

அந்த மனுவில், அதிகபட்சமாக 4 பேர் முதல் 5 பேர் வரை பணியாற்றும் படத்தொகுப்பு, அதிகபட்சமாக 4 பேர் முதல் 5 பேர் பணியாற்றும் ஒலிச்சேர்க்கை, 10 முதல் 15 பேர் பணியாற்றும் கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 பேர் முதல் 5 பேர் பணியாற்றும் வண்ண கிரேடிங், அதிக பட்சமாக 5 பேர் பணியாற்றும் பின்னணி இசை சேர்ப்பு, 4 பேர் முதல் 5 பேர் வரை பணியாற்றும் ஒலிக்கலவை, ஆகிய திரைப்பட பின்னணி வேலைகளுக்கும், அந்த வேலைகளிலும் ஈடுபடும் அலுவலகங்கள் இயங்கவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுபோன்ற திரைப்பட பின்னணி பணிகளுக்கு கேரள அரசு நேற்று முதல் அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6502

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘செளகிதார்’ தொடங்கியது!
Friday July-05 2024

நடிகர் பிருத்வி அம்பர் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படமான ‘செளகிதார்’ படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பந்தே மகாகாளி கோவிலில் சிறப்பான பூஜையுடன் தொடங்கியது...

’கூழாங்கல்’ பட தயாரிப்பாளரின் அடுத்த முயற்சி ’ஜமா’!
Friday July-05 2024

‘கூழாங்கல்’ படத்தை தயாரித்த லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் (Learn & Teach Productions) நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது...

’ஒரு நொடி’ வெற்றியை தொடர்ந்து தமன்குமார் நடிக்கும் ‘பார்க்’!
Friday July-05 2024

2012 ஆம் ஆண்டு வெளியான ‘ஆச்சரியங்கள்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான தமன்குமார், ‘சட்டம் ஒரு இருட்டறை’, ’தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்ததோடு, ‘அயோத்தி’ உள்ளிட்ட சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்...