Latest News :

முன் உதாரணமாக அமைய போகிறார்! - விஜய் ஆண்டனிக்கு குவியும் பாராட்டுகள்
Tuesday May-05 2020

கொரோனா பிரச்சினையால் சினிமா தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிவடைந்த படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் இருக்க, முடிவடையும் தருவாயில் இருக்கும் படங்களை முடிக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகிறார்கள். இதனால், தயாரிப்பாளர்கள் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதோடு, மிகப்பெரிய அளவில் இழப்பை சந்திக்கும் சூழலும் உருவாகி வருகிறது.

 

தற்போது, சில கட்டுப்பாடுகளுடன் சில தொழில்கள் இயங்க அரசு அனுமதி அளித்திருப்பதோடு, சினிமா துறையின் சில பணிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும், என்று தயாரிப்பாளர்களும், பெப்ஸி அமைப்பும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம், தயாரிப்பாளர்கள் சந்தித்திருக்கும் இழப்பீட்டை சமாளிக்க வேண்டும், என்றால் முன்னணி நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும், என்று மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர் சுரேஷ் வலியுறுத்தியிருந்தார்.

 

இந்த நிலையில், இந்திய சினிமாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பால் இழப்பை சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு, நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை அதிரடியாக குறைத்திருக்கிறார்.

 

’கொலைகாரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்று படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். பெப்ஸி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் ஆண்டனி, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில் ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்திலும் நடித்து முடித்ததை தொடர்ந்து, இயக்குநர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகும் ’காக்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த மூன்று படங்களும் 2020 ஆம் ஆண்டு வெளியிடும் திட்டத்தில் உருவாகி வந்த நிலையில், கொரோனா பிரச்சினையால் தற்போது இந்த மூன்று படங்களில் வெளியீட்டு பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, இப்படங்களில் முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவும் நோக்கத்தில், இந்த மூன்று படங்களில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு பேசப்பட்ட சம்பளத்தில் இருந்து தலா 25 சதவீதத்தை அவர் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த சதவீதம் சுமார் ரூ.1 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இந்த சம்பள குறைப்பு மூலம், மூன்று தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து, வெகு விரைவில் அவர்களின் படங்களை எந்த பிரச்சனைகளும் இல்லாமல் வெளியிட முடியும் என்று விஜய் ஆண்டனி நம்புகிறார்.

 

விஜய் ஆண்டனியின் இந்த சம்பள குறைப்பை இந்த மூன்று படங்களின் தயாரிப்பாளர்கள் மட்டும் இன்றி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் அனைவரும் வரவேற்றிருப்பதோடு, விஜய் ஆண்டனின் இந்த நடவடிக்கை இந்திய சினிமாவில் முன் உதாரண நடவடிக்கையாகவும் இருக்கும், என்றும் தெரிவித்துள்ளனர்.

 

விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அவரின் ’பிச்சைக்காரன்’ திரைப்படம் தொலைக்காட்சி வெளியீட்டிலும் பெரிய சாதனை படைத்தது. ஏப்ரல் 14 ஆம் தேதி தொலைக்காட்சியில் திரையிடப்பட்ட ’திமிரு புடிச்சவன்’ திரைப்படமும், பார்வையாளர்களின் எண்ணிக்கையில் ’தர்பார்’ மற்றும் ’சீமா ராஜா’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இருந்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6505

அறிமுக நாயகன் ஜேம்ஸ் கார்த்திக், இனியா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீரன்’ விரைவில் வெளியாகிறது!
Tuesday July-02 2024

ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் துரை கே...

கே.எஸ்.ரவிக்குமார், ரச்சிதா இணைந்து நடிக்கும் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’!
Monday July-01 2024

ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் மிலிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி இணைந்து தயாரிக்கும் படம் ‘யூ ஆர் நெக்ஸ்ட்’...

வெளியானது ‘விடாமுயற்சி’ முதல் பார்வை! - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
Monday July-01 2024

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில், அஜித் குமார் நடிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்...