பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெரும் பிரபலமடைந்துள்ள நடிகை ஓவியா, அதே நிகழ்ச்சியால் பெரும் மன உலைச்சலுக்கும் ஆளானார் என்பது உலகமே அறிந்தது. ஆனால், அறியாத பல விஷயங்கள் அவரது மனதிற்குள் புதைந்துள்ளது.
ஆரவுடனான காதல், அதனால் ஏற்பட்ட தோல்வி என்று பித்து பிடித்தது போல பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்த ஓவியா, தற்கொலை செய்துகொள்ள முயன்றதாக கூறப்பட்டு பிறகு போலீசார் அந்த வீட்டுக்குள் எண்ட்ரியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓவியாவை பிக் பாஸ் வீட்டில் இருந்து நிகழ்ச்சி குழுவினர் வெளியேற்றினார்கள்.
இந்த நிலையில், தன்னை வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபலப்படுத்த விஜய் டிவி செய்த சில வேலைகள் குறித்து ஓவியா மனம் திறந்து தனது ரசிகர்களிடம் விரைவில் கூற இருக்கிறார்.
இது குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்கள் பலர் லைவ் சேட்டில் நான் பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடியாமல் நான் யாரிடமும் பேசக்கூடாது என்ற அக்ரிமெண்ட் இருப்பதால், என்னால் லைவ் சாட்டில் வரமுடியவில்லை. பிக் பாஸ் 100 நாட்கள் முடியட்டும், நான் லைவ் சாட்டுக்கு வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆக, பிக் பாஸ் முதல் சீசன் முடிந்ததும், அந்த நிகழ்ச்சியை பிரபலப்படுத்த விஜய் டிவி செய்த டிராமா மற்றும் தில்லாலங்கடி வேலைகள் குறித்து ஓவியா தனது ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, ஊடகத்தினருக்கும் தெரிவிப்பது போல் அவரது டிவிட் அமைந்திருப்பதால், பிக் பாஸ் மூலம் நிமிர்ந்த விஜய் டிவி, ஓவியாவால் கவிழப்போவது உறுதியாகிவிட்டது.
Could see many tweets asking for a live chat.. eager and excited to do one, just like y'all. Shall chat once BB's 100 days gets completed 😘
— Oviyaa (@OviyaaSweetz) September 18, 2017
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...