Latest News :

படுக்கைக்கு அழைக்கும் கோட் வேர்டு! - பிக் பாஸ் நடிகை வெளியிட்ட சீக்ரெட்
Saturday May-09 2020

இந்திய தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சியாக பிக் பாஸ் உள்ளது. இந்தி மொழியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது தென்னிந்திய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும், தமிழ் பிக் பாஸ் சூப்பர் டூப்பர் ஹிட் என்று சொல்லலாம். தற்போது நான்காவது சீசனுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது பல்வேறு சர்ச்சைகளும் எழந்தது. குறிப்பாக நடிகைகள் பலர் மீ டூ புகார்கள் கூறியதை போல், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் பலரும் மீ டூ புகார் கூறினார்கள். பிக் பாஸ் போட்டியில் பங்கேற்க வேண்டுமானால், படுக்கையை பகிர்ந்துக் கொள்ள வேண்டும், என்று சிலர் கேட்டதாக, போட்டியாளர்கள் சிலர் கூறினார்கள். இதுபோன்ற குற்றச்சாட்டு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எழவில்லை என்றாலும், தெலுங்கு மற்றும் பிற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் எழுந்தது.

 

இந்த நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரும், ‘காமசூத்ரா’ படத்தின் நாயகியுமான ஷெர்லின் சோப்ரா, சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதற்கு பயன்படுத்தப்படும் கோட் வேர்டு, பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 

Sherlyn Chopra

 

இது குறித்து கூறிய ஷெர்லின் சோப்ரா, “இந்தி திரையுலகில் நான் புகைப்படங்களுடன் வாய்ப்பு தேடிய ஆரம்ப காலத்தில், பலர் நள்ளிரவில் சந்திப்போமா என என்னிடம் கேட்டார்கள். நள்ளிரவிலா? எப்போது வரசொன்னீர்கள்? என புரியாமல் கேட்பேன். அதற்கு இரவு 11 அல்லது 12 மணி என்பார்கள். நான் என்னால் அந்த நேரத்தில் வர இயலாது என கூறி மறுத்து விட்டேன்.

 

அதன் அர்த்தம் என்ன என்பது சில நாட்களில் கழித்து தான் தெரிந்தது. இப்படியே இரவு டின்னருக்கு அழைத்தார்கள். அது படுக்கைக்கு அழைக்கும் ரகசிய கோட் வேர்டு என்பதும் தெரிந்தது. பின்னர் நான் டயட்டில் இருக்கிறேன், காலை அல்லது மதிய உணவுக்கு வேண்டுமானால் வருகிறேன் என கூறிய பின் என்னை அழைப்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் ஷெர்லின் சோர்பா, 2002 ஆம் ஆண்டு வெளியான ‘யுனிவர்சிட்டி’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6533

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...