கடந்த மே மாதம் மாவட்டம் வாரியாக தனது ரசிகர்களை அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், அவர்களது முன்னிலையில் பேசும் போது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக கூறினார். இதையடுத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி, என்று அவரது நெருங்கிய நண்பர்கள் கூறி வந்த நிலையில், அரசியல் தலைவர்கள், முக்கியமான ஊடக நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கனவே 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், மீதியுள்ள 15 மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களை அக்டோபர் மாதம் சந்திக்க முடிவு செய்துள்ளாராம். தொடர்ச்சியாக 6 நாட்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படிருப்பதோடு, இந்த கூட்டத்தில் தனது அரசியல் பிரவேசம் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவும் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படத்தில் ரஜினி தொடர்பாக காட்சிகள் இன்னும் சில தினங்களில் முடியப்போவதால், அடுத்ததாக அரசியல் வேலைகளில் ரஜினிகாந்த் தீவிரம் காட்டப் போவதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் சுந்தர்.சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்திற்காக இணைந்திருக்கிறார்கள்...
புக் ஆப் சினிமா புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் அனூப் ரத்னா தயாரித்துள்ளார்...
பி.வி பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்கும் படத்தில் ஜெய் மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள்...