Latest News :

டிஜிட்டலில் வெளியாகும் ஜோதிகா படம்! - ரிலீஸ் தேதி அறிவிப்பு
Friday May-15 2020

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃபெட்ரிக் என்பவர் இயக்கியிருக்கும் இப்படத்தில் இயக்குநரும் நடிகர்களுமான கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். கடந்த மார்ச் மாதம் வெளியாக வேண்டிய இப்படம், கொரோனா பாதிப்பால் வெளியாகமல் இருந்த நிலையில், இப்படத்தை நேரடியாக ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்வதற்கான முயற்சியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டது. அதன்படி, அமேசான் பிரைம் நிறுவனம் இப்படத்தை நல்ல விலைக்கு வாங்கியதாக கூறப்பட்டது.

 

இதையடுத்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் தயாரிக்கும் மற்றும் நடிக்கும் படங்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என்றும், அவர்களது படங்களுக்கு திரையரங்கங்கள் கொடுக்கப்போவதில்லை என்றும் அறிவித்தது.

 

இந்த பிரச்சினையில், தயாரிப்பாளர்கள் பலர் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலும், திரையரங்க உரிமையாளர்கள், நேரடியாக ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் ரிலீ செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

 

இந்த நிலையில், அமேசான் பிரைமில் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ரிலீஸாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மே மாதம் 29 ஆம் தேதி ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ அமேசானின் ரிலீஸாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

ஜோதிகாவின் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘பென்குயின்’ உள்ளிட்ட மேலும் சில தமிழ் படங்கள் ஒட்டி தளங்களில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6571

’இந்தியன் 2’ படத்திற்காக லைகா நிறுவனம் மேற்கொள்ளும் பிரமாண்ட விளம்பர பணிகள்!
Friday June-28 2024

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படம் வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பர பணிகளை லைகா நிருவனம் மிக பிரமாண்டமான முறையில் செய்து வருகிறது...

’கொட்டேஷன் கேங்’ படம் சன்னி லியோன் மீதான உங்கள் பார்வையை மாற்றிவிடும் - நடிகை பிரியாமணி நம்பிக்கை
Friday June-28 2024

ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’...