விவேகம் படம் குறைகள் குறித்து என்னதான் சத்தமாக விமர்சகர்கள் பேசினாலும், காதில் பச்சி வைத்தது போலவே படக்குழுவினர் அனைவரும் மவுனம் காத்து வர, அஜித் ரசிகர்களோ படத்தின் சாதனைகளை பறிசாற்றிக் கொண்டாடுவதை மட்டும் நிறுத்திய பாடில்லை.
விவேகம் தோல்வி படம் என்று கலைமகள் வந்து சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ள தயாராக இல்லாத அஜித் ரசிகர்கள், அஜித் - சிவா கூட்டணி மீண்டும் இணையப்போகிறது, என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியில் உரைந்து போவதுடன், “ஆண்டவா அஜித்துக்கு நல்ல புத்திய கொடு...” என்று நின்ற இடத்திலே தங்களது குல தெய்வங்களை வேண்டவும் செய்கிறார்கள்.
ரசிகர்களையே வேண்டாம் என்று விரட்டியடித்த அஜித், அவர்களது எண்ணத்தையும் உதாசினப்படுத்திவிட்டு தனது அடுத்த படத்தையும் சிவாவுக்கே கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதே சமயம், மீண்டும் அஜித் - சிவா கூட்டணிக்கு ரசிகர்கள் மட்டும் அல்ல கோடம்பாக்க தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை உணர்ந்த அஜித், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒற்றை எழுத்து ஆங்கில சேனல் ஒன்று, பிரபல நடிகையின் கணவரும் பாலிவுட் தயாரிப்பாளருமான ஒருவருடன் இணைந்த் தமிழில் ஏகப்பட்ட படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாம். ஆரம்பமே அஜித் மூலமாக இருக்க வேண்டும் என்று அந்நிறுவனம் விரும்ப, அனைத்தையும் யோசித்த அஜித், அந்த நிறுவனத்திற்கு ஒகே சொல்லிவிட்டாராம்.
அதே சமயம், அஜித்தின் இந்த முடிவால் பண பலம் அதிகம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனம் தமிழ் சினிமாவில் காலூன்ற இருப்பது கோடம்பாக்க தயாரிப்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்திருக்கும் படம் ‘தண்டேல்’...
சென் ஸ்டுடியோஸ் (ZHEN STUDIOS) சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், தேஜாவு படப்புகழ் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ் & ஷ்ம்ருதி வெங்கட் நடித்துள்ள "தருணம்" திரைப்படம், வரும் ஜனவரி 31 ஆம் தேதி, பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது...