கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திரிஷா, கடந்த 15 வருடங்களாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வருகிறார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன், என்ற தனது முடிவை ஏற்றுக்கொள்பவரை தான் திருமணம் செய்துகொள்வேன், என்று சினிமா மீது தீராதா காதல் கொண்டிருக்கும் திரிஷா, தற்போது காலாண்டர் கேர்ள் ஆகியுள்ளார்.
பிரபல புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம், ஒவ்வொரு ஆண்டும் பிரபல நடிகர், நடிகைகளை வைத்து போட்டோ சூட் ஒன்றை நடத்தி காலண்டர் வெளியிட்டு வருகிறார். வெறுமன நடிகர் நடிகைகள் என்று இல்லாமல், அவர்களுடன் தீம் ஒன்றையும் சேர்த்து அவர் நடத்தும் போட்டோ சூட்டிலும், அந்த காலண்டரிலும் பங்கேற்க நட்சத்திரங்கள் பெரிதும் விரும்புவதுண்டு.
வெங்கட்ராம் தான் வெளியிடும் ஒவ்வொரு ஆண்டு காலண்டரிலும் நடிகைகள் பட்டியலில் திரிஷா நிச்சயம் இருப்பார். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான காலாண்டருக்கான போட்டோ சூட்டை சமீபத்தில் வெங்கட்ராம் நடத்தியுள்ளார். அதில் திரிஷாவும் பங்கேற்றுள்ளார்.
காலண்டருக்காக திரிஷாவை க்ளிக்கைய புகைப்படம் ஒன்றை வெங்கட்ராம், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, தற்போது அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...