கொரோனா வைரஸ் தடுப்புக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டது போல, சினிமா தொழிலும் பெரிதும் பாதிப்படைந்தது. தற்போது சிறு மற்று குறுந்தொழில்கள், சில தொழிற்சாலைகள் இயங்க சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்கி வரும் நிலையில், சுமார் இரண்டரை மாதங்களாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கவில்லை.
அரசாங்கத்தின் எந்தவிதமான சலுகைகளும் இன்றி சொந்த முதலீட்டில் நடைபெற்று வந்த திரையரங்க தொழில் மூலம் அரசுக்கு வருவாய் கிடைப்பதோடு, இந்த தொழில் மூலம் சுமார் 50,000-ம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்து வந்தது.
திரையரங்குகள் மூடப்பட்ட பின் 50,000-ம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகியுள்ளது. பிற தொழில்களுக்கு விதி முறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என 'தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்' வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கோரிக்கைகளாவன.
திரையரங்கு உரிமையாளர்கள் கடைபிடிக்கவேண்டிய நடை முறைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டுகிறோம்.
அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதால் அரசு உடனடியாக விதிமுறைகளை வெளியிட்டுட்டு திரையரங்கு உரிமையாளர்கள் முன் தயாரிப்பு பணிகளை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.
தற்போது கொரானா ஊரடங்கு காலத்தில் அனைத்து பொருட்கள், போக்குவரத்து செலவுகள் விலையேற்றம் பெற்றுள்ளன.
இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டுகளிப்பது சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கட்டுகள் விற்பன செய்துபார்வையாளர்களை அனுமதிக்க முடியும்.
இதன் காரணமாக டிக்கட் விலையை அதிகரிக்காமல்அதே நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருக்ககூடியதிரையரங்கு தொழிலை பாதுகாக்கவும் பார்வையாளர்கள் வருகையை உறுதிப்படுத்தி அதிகரிக்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித்தர வேண்டுகிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது 1000 திரையரங்குகள் இயங்கி வருகின்றது. இவற்றில் தனி திரையரங்குகள் 700. இரண்டு மற்றும் அதற்கு அதிகமான திரைகளை கொண்டமால், மல்டிபிளக்ஸ் 300 உள்ளது.
தற்பொழுது நடைமுறையிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான கேளிக்கை வரி 8% முழுவதுமாகரத்து செய்ய வேண்டுகிறோம். இதனை ரத்து செய்வதன் மூலம் திரையரங்கடிக்கட் கட்டணம் குறையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் இதன்மூலம் திரையரங்கு, விநியோகஸ்தர்கள், அரசு எனஅனைத்து பிரிவினருக்கும் வருவாய் கூடுதலாகக் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.
தனி திரையரங்குகளுக்கான GSTவரியை 5%சதவிகிதமாககுறைத்து நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஆவன செய்ய வேண்டுகிறோம். இவ்வாறு குறைத்து நிர்ணயம் செய்யும் வரிக்கு தற்பொழுது உணவகங்களுக்கு விதித்துள்ளது போன்று உள்ளீடு மறுப்பு(no input tax credit) முறையை அமுல்படுத்த வேண்டுகிறோம்.
இவ்வாறு செய்வதன் மூலம் தற்பொழுது 100 க்கு விற்பனைசெய்யப்படும் (GST 12% + LBTtax8%) டிக்கெட் விலை 84 ரூபாய் 5% GST-யுடன் சேர்த்து குறையும். இதன் காரணமாக திரையரங்குகளில் டிக்கட் கட்டணம் குறையும், சாமான்ய மக்கள் திரையரங்குக்கு அதிகமாக வருவதற்கான சூழல் உருவாகும்.மால், மல்டிபிளக்ஸ் திரைகளுக்கு உள்ளீடு அனுமதியுடன் தற்பொழுது நடைமுறையில் 18% , 12% GST வரியை ரத்து செய்து, ஒரே GST 12% நிர்ணயம் செய்து தரவேண்டுகிறோம்.
தேசிய ஊரடங்கு காலத்திற்குமுன்பாக தனிதிரையரங்குகளுக்கு அதிகபட்சமாக 15% பார்வையாளர்கள் அளவில்தான் வருகை இருந்தது மேற்கூறிய கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றும் பட்சத்தில் 20% பார்வையாளர்கள் வரை திரையரங்குக்கு வரக்கூடிய சூழல் ஏற்படும் இல்லாத பட்சத்தில் 10% பார்வையாளர்களுக்கு குறைவாகவே வருவார்கள் இதன் காரணமாக ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிவரும் திரையரங்கு தொழில் நலிவடைவதற்கான சூழல் உருவாகும்.
தற்பொழுது கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடியுள்ள நிலையில் திரையரங்கிற்கான மின் கட்டணத்தில் 50% சலுகை தர வேண்டுகிறோம்.
மேலும் தற்பொழுது முழு முடக்ககாலம் வரை திரையரங்கிற்கான சொத்து வரியை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டுகிறோம் தொழில் துவங்கிய பிறகு திரை தொழில் சகஜ நிலை திரும்பும்வரை சொத்து வரியில் 50% சலுகைதர வேண்டுகிறோம்.
தமிழகத்தில் கிராமங்கள் சிறுநகரங்களில் கெளரவத்திற்காக காலங்காலமாக இயங்கிவரும் தனித்திரையரங்குகளை அழிவில் இருந்து காத்திட மத்திய மாநில அரசுகள் மேற்காணும் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...