கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் 100 நாட்கள் முடிவடைவதால், போட்டியின் வெற்றியாளரை அறிவிக்கும் நிகழ்ச்சி அன்று நடைபெற உள்ளது. இதில், போட்டியில் கலந்துக்கொண்டு வெளியேறியவர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள, ஓவியாவும் கலந்துக்கொள்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
போட்டியில் இருந்து வெளியேறிய ஓவியாவை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும், என்று முயற்சித்து தோல்வி அடைந்த விஜய் டிவி, தற்போது 100 வது நாள் விழாவில் அவரை பங்கேற்க வைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
தற்போது, வெளிநாட்டில் படப்பிடிப்பிற்காக சென்றிருக்கும் ஓவியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் வருவதால், அவர் அதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஓவியாவின் நெருங்கிய வட்டாரத்தில், அவர் பிக் பாஸ் 100 வது நாள் விழாவில் பங்கேற்பார? என்று கேட்டதற்கு, ஓவியா இனி பிக் பாஸ் சம்மந்தமான எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்க விரும்பவில்லை. தற்போது அவர் படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார், என்ற தகவல் தெரிந்தது.
அதே சமயம், பக்காவான அக்ரிமெண்டோடு போட்டியாளர்களை ஒப்பந்தம் செய்துள்ள விஜய் டிவி, 100 வது நாள் விழாவில் போட்டியாளர்கள் பங்கேற்க வேண்டும், என்ற சாரம்சத்தை ஒப்பந்தத்தில் வைத்திருந்தால், ஓவியாவால் தப்ப முடியாது, என்றும் கூறப்படுகிறது.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...