தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான சூரி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில், வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.
தமிழகத்தின் முன்னணி கல்வி நிறுவனமான வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள், மாநகராட்சி ஊழியர்கள், ஏழை எளிய மக்கள் என்று பல்வேறு தரப்பினருக்கு தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறது.
இதற்கிடையே, நடிகர் சூரி கேட்டுக் கொண்டதன் பேரில், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திரைத்துறைனருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவாசிய நிவாரணப் பொருட்களை நடிகர் சூரி முன்னிலையில், வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இன்று வழங்கியது.
சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்மாள் பள்ளியில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன், மாற்றம் பவுண்டேஷன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நடிகர் சூரி கலந்துக் கொண்டு ஏராளமான மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூரி, “எல்லோரும் நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். இந்த நேரத்தில் உங்கள் அனைவரையும் பார்த்ததில் எனக்கு சந்தோஷம், அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது. நாமெல்லாம் சந்திப்பதற்கு இப்படி ஒரு காலகட்டம் உருவாகியிருக்கக்கூடாது.
கடந்த 3 மாதத்தில் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் சேர்ந்து படித்த ஒரே பாடம் இந்த கொரோனாதான்.
தேவையின்றி வெளியே வராதீர்கள், உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்' என நமக்கு அடிக்கடி உணர்த்தியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் தான். அவர்களுக்கு குடும்பம் இருந்தும் பொதுமக்களுக்காக அவர்கள் ஆற்றும் பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
என் சினிமா குடும்பம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், துணை நடிகர்கள், நாடக நடிகர்கள், சினிமா துறையை சார்ந்த என் நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் என்னால்ஆன உதவியை நான் செய்துள்ளேன், செய்து கொண்டும் இருக்கிறேன்.
சமீப காலமாக பல உதவிகளை செய்து வரும் "வேலம்மாள் கல்விக் குழுமம்" என்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை மிகவும் மதிக்கிறேன். மேலும், "மாற்றம் பவுண்டேஷன்" திரு. சுஜித், திரு. உதய்சங்கர் அவர்களும் அவர்களால் ஆன பல உதவி திட்டங்களை செய்து வருகின்றனர்.
இன்று இவர்களோடு சேர்ந்து உங்கள் அனைவருக்கும் உதவ நான் அன்போடு கேட்டுக் கொண்டேன். சிறிதும் யோசிக்காமல் அவர்களும் உடனே சம்மதம் தெரிவித்தது மட்டுமன்றி உங்கள் தலைமையிலேயே இந்த உதவி திட்டங்கள் நடைபெறட்டும் என்று கூறினார்கள். அதன் மூலமாக இன்று உங்களுக்கு இந்த உதவியை செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.
நமது உயிரை காக்க நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடிப்போம். பயப்படாமல் இருங்கள், அதே நேரத்தில் மெத்தனமாக இருக்காதீர்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு அதிக பாதுகாப்பு கொடுங்கள். மீண்டும் நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு வர அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்றார்.
’சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கும் மூன்றாவது படம் ‘வா வாத்தியார்’...
Treat kids on Children’s Day with some of the most exciting and entertaining shows that offer humor, adventure, and valuable life lessons including national and international cartoons with this affordable option on JioCinema...
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...