பாலா படத்தில் அடிபட்டு மிதிப்பட்டு நடித்ததால் என்னவோ, தற்போது வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ‘நிபுணன்’ படத்தை தொடர்ந்து மேலும் ஒரு ஆக்ஷன் படத்தில் வரலட்சுமி நடிக்க உள்ளார்.
மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிரியதர்ஷினி, என்ற பெண் இயக்குநர் இயக்கும் இப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாகும். பயணம், த்ரில்லர், சஸ்பென்ஸ் கலந்த இப்படத்தில் வரலட்சுமி அதிரடி ஆக்ஷன் காடிகளில் நடிக்கப்போகிறாராம்.
பூனை தான் எலியை துரத்தும், ஆனால், ஒரு எலி பூனையை துரத்துவதோடு, தந்திரமாக அந்த பூனையை எப்படி வீழ்த்துகிறது, என்பது தான் இப்படத்தின் கருவாம். கரு எளிமையாக இருந்தாலும், இப்படத்தின் திரைக்கதை படு விறுவிறுப்பாக நகரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அந்த ஹீரோ ஓகே சொன்னால், அவருடன் மோத வரலட்சுமி தயாராம்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...