மலையாளப் படம் ‘பிரேமம்’ மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி, அப்படத்தின் வெற்றியால் தென்னிந்திய சினிமா முழுவதும் பிரபலமானார். இதையடுத்து அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தது.
மணிரத்னத்தின் காற்று வெளியிடை, விக்ரமின் ஸ்கெட்ச் ஆகிய படங்களில் சாய் பல்லவி நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து பிறகு சில காரணங்களின் அவர் நடிக்காமல் போய்விட்டது.
இந்த நிலையில், விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘கரு’ படத்தின் மூலம் சாய் பல்லவி தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தாய்க்கும், மகளுக்கும் இடையிலான பாசத்தை பற்றிய கதையா உருவாகியுள்ள இப்படத்தில் 4 வயது பெண் குழந்தைக்கு அம்மாவாக அவர் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் தான் அறிமுகமாகும் முதல் படத்திலேயே இப்படி அம்மா வேடத்தில் அறிமுகமாவது குறித்து சாய் பல்லவியிடம் கேட்டதற்கு, ஹீரோக்களுடன் டூயட் பாடுவதை காட்டிலும் நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கதாபாத்திரங்களுக்கே நான் முக்கியத்துவ கொடுப்பேன். அந்த வகையில் கரு எனக்கு தமிழ் சினிமாவில் நல்ல பெயரை வாங்கி கொடுப்பதோடு எனது திறமையையும் வெளிப்படுத்தும் படமாக இருக்கும், என்று தெரிவித்தார்.
எக்ஸ்.பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகும் படம் ‘நேசிப்பாயா’...
ஸ்ரீ கிருஷ்ண புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீன் டீ...
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள ’எமகாதகி’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது...