Latest News :

பிரபல சீரியல் நடிகையின் கதறல்! - முதலமைச்சர் கவனிப்பாரா?
Tuesday June-16 2020

கொரோனா ஊரடங்கினால் திரைப்படம் மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருப்பதால் நடிகர், நடிகைகள் வறுமையில் சிக்கியுள்ளனர். குறிப்பாக துணை நடிகர், நடிகைகளின் நிலை தாம் மிகவும் மோசமாக இருக்கிறது. இப்படி வறுமையை ஒரு பக்கம் எதிர்கொள்ளும் சினிமாத் துறை கடந்த சில நாட்களாக மரண சம்பவங்களையும் அதிகமாக சந்தித்து வருகிறது.

 

இந்த நிலையில், டெல்லியை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை தீபா சிங், என்பவர் கண்ணீர் விட்டு அழுதபடியே முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் அழுதபடியே வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது டெல்லியை தாண்டியும் வைரலாகி வருகிறது.

 

தீபிகா சிங், தனது தாய்க்கு கொரோனா அறிகுறி தெரிந்ததால் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அந்த மருத்துவமனையில் அதிக செலவு ஆகும் என்பதால், வேறு மருத்துவமனைக்கு தனது தாயாரை மாற்ற முயற்சித்திருக்கிறார். ஆனால், அந்த மருத்துவமனை அவரது தாயாரின் பரிசோதனை முடிவுகளை கொடுக்க மறுக்கிறதாம்.

 

இதனால் முதல்வருக்கு சமூக வலைதளம் மூலம் கோரிக்கை வைத்துள்ள தீபிகா சிங், ”தங்கள் குடும்பத்தில் மொத்தம் 42 பேர், மற்றவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும். தாயாரை வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்க அந்த பரிசோதனை முடிவு அறிக்கை வேண்டும், முதல்வர் தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகையின் இந்த கண்ணீர் கோரிக்கைக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செவிக் கொடுப்பாரா, என்று பொருத்திருந்து பார்ப்போம்.

 

 

Related News

6734

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...