Latest News :

பிக் பாஸ் கவினின் திடீர் விஸ்வரூபம்! - விஜய் ரசிகர்கள் அப்செட்
Tuesday June-16 2020

பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர் கவின். இவர் ஆரம்பத்தில் சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நத்திருப்பதோடு, சில தொலைக்காட்சி தொடர்களில் முக்கியமான வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஏன், ‘நட்புனா என்னானு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஆனால், இதில் கிடைக்காத பாப்புலாரிட்டி பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்தது.

 

பாப்புலாரிட்டியுடன் தற்போது பல படங்களில் ஹீரோ வாய்ப்பும் கிடைத்திருப்பதால், கவின் தற்போது ‘லிப்ட்’ உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், கவினின் திடீர் விஸ்வரூபம் விஜய் ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.

 

நடிகர் விஜய்க்கு வரும் ஜூன் 22 ஆம் தேதி பிறந்தநாளாகும் இதனால், அவரது ரசிகர்கள் சமீபத்தில் காமெண் டிபி-ஒன்றை வெளியிட்டனர். இதனை சில சினிமா பிரபலங்களும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு டிரெண்டாக்கினார்கள்.

 

இந்த நிலையில், அதே ஜூன் 22 ஆம் தேதி பிக் பாஸ் கவினுக்கும் பிறந்தநாள் என்பதால், அவரது ரசிகர்களும் விஜய் ரசிகர்கள் பாணியில், கவினின் பிறந்தநாளுக்காக காமெண்  டிபி ஒன்றை வெளியிட, அதை பிக் பாஸ் ஆர்த்தி, நடன இயக்குநர் சதிஷ் உள்ளிட்ட சில பிரபலங்கள் வெளியிட்டதால், அந்த டிபி வைரலாகி, இந்திய அளவில் டிரெண்டாகி விட்டது.

 

கொரோனா பாதிப்பால் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம், என்று விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தாலும், ரசிகர்கள் அவரது பிறந்தநாளை டிரெண்டாக்கும் விதமாக காமென் டிபி வெளியிட்டு வைரலாக்கி வந்த நிலையில், அதற்கு போட்டியாக கவின் பிறந்தநாள் காமெண் டிபி வெளியானதால், விஜயின் டிபி-யின் மவுசு குறைந்து விட்டதாகவும், இதனால் விஜய் ரசிகர்கள் அப்செட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

6736

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...