Latest News :

பிக் பாஸ் வனிதாவுக்கு 3 வது திருமணம்! - மாப்பிள்ளை யார் தெரியுமா?
Tuesday June-16 2020

பிக் பாஸ் மூலம் மீண்டும் மக்களிடம் பிரபலமான முகமாகியிருக்கும் வனிதாவுக்கு 3 வது திருமணம் நடைபெற உள்ளது.

 

நடிகர் விஜயகுமார் - நடிகை சுஜா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார், 1995 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானர். அதன் பிறகு சில படங்களில் நடித்தவர், தொடர் பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துக் கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

 

இதற்கிடையே முதல் கணவரை விவாகரத்து செய்துக் கொண்டு இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட வனிதா, இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்த நிலையில், நடன இயக்குநர் ராபர்ட்டுடன் பழகி வந்தவர், தனக்கும் ராபர்ட்டுக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தெரிவித்ததோடு, ராபர்ட் இயக்கிய ‘எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்’ என்ற படத்தை தயாரிக்கவும் செய்தார்.

 

ஆனால், ராபர்ட் வனிதா உறவு ரொம்ப நாள் நீடிக்கவில்லை. ராபர்ட் வனிதாவுடன் தான் நட்பாக மட்டுமே பழகினேன், என்று கூறி ஒதுங்கிக் கொண்டார். இதன் பிறகு பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற வனிதா, போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே தனது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் கவனம் பெற்றவர், முக்கியமான போட்டியாளராகவும் திகழ்ந்தார்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், சொந்தமாக யுடியுப் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் சமையல் தொடர்பான வீடியோக்களை போட்டு வருகிறார்.

 

இந்த நிலையில், வனிதா மூன்றாவது திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார். பீட்டர் பவுல் என்பவருடன் அவருக்கு வரும் ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கொரொனா பிரச்சினையால் இந்த திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம், பீட்டர் பவுல் குறித்து முழுமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

 

Vanitha Vijayakumar

 

இரண்டு திருமணமாகி விவாகரத்து ஆன வனிதாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

6738

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...