Latest News :

மருத்துவமனையில் தவித்த விஜய் பட இயக்குநர்! - உதவிய நயன்தாரா பட தயாரிப்பாளர்
Tuesday June-16 2020

விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். இப்படத்தை தொடர்ந்து ‘பைசா’, ‘டார்ச்லைட்’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார்.

 

இயக்குநர் மஜீத் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் போதே, அவரது மனைவி கொரோனா சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும்? என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள், ரூ.2,80,000 ஆகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 

உடனே மஜீத்தின் மனைவி தங்களது கையில் இருக்கும் பணத்தை சரி பார்த்துக் கொண்டு, சிகிச்சையை தொடங்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆனால், சிகிச்சை முடிந்து மஜீத் குணமடைந்த பிறகு மருத்துவமனை நிர்வாகம் ரூ.3,40,000 கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

இதையடுத்து மஜீத்தின் மனைவி மருத்துவமனை நிர்வாகத்திடம் பல கேள்விகள் கேட்க, கட்டணத் தொகையை ரூ.4 லட்சமாக மருத்துவமனை உயர்த்தியது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வெளியே வர முடியாமல் மஜீத் தவித்திருக்கிறார். பிறகு விஷயத்தை தனது சினிமா பிரபலங்கள் சிலரிடம் அவர் சொல்ல, அம்மா கிரியேசன்ஸ் டி.சிவா ரூ.80 ஆயிரத்தை விஜயா மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்.

 

இதற்கிடையே, கட்டண தொகையை ரூ.4,65,000 ஆக உயர்த்திய மருத்துவமனை நிர்வாகம், இயக்குநர் மஜீத்தை டிஸ்சார்ஜ் செய்யாமல், பாக்கி தொகையை கேட்டு தொடர்ந்து பிரச்சினை செய்திருக்கிறார்கள்.

 

இதனால், என்ன செய்வது என்று தவித்த இயக்குநர் மஜீத்துக்கு, தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் உதவி செய்துள்ளார். மருத்துவமனைக்கு செலுத்த வேண்டிய பாக்கி தொகை முழுவதையும் அவரே செலுத்தி இயக்குநர் மஜீத்தை மருத்துவமனையில் இருந்து மீட்டிருக்கிறார்.

 

நயன்தாரா நடித்த ‘அறம்’, ‘ஐரா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்திருக்கும் கோட்டபாடி ஜே.ராஜேஷ், தனது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘டாக்டர்’, ’அயலான்’, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபெ ரணசிங்கம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகிறார்.

Related News

6739

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...