Latest News :

கலைந்து போன கனவு! - சோகத்தில் விஷ்ணு விஷால்
Wednesday June-17 2020

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றி ஆண்டாக அமைந்தது. அவர் நடிப்பில் அந்த ஆண்டில் வெளியான ‘ராட்சசன்’ மற்றும் ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என இரண்டு படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. அதே சமயம், அந்த ஆண்டு தனது சொந்த வாழ்க்கையில் சோதனையை சந்தித்த விஷ்ணு, தனது காதல் மனைவி ரஜினியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

 

விவாகரத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திய விஷ்ணு விஷால், தனது விவாகரத்துக்கான காரணத்தையும் சில மாதங்களுக்குப் பிறகு தெரிவித்தவர், பேட் மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுடன் பழக தொடங்கினார். இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

 

தற்போது ‘காடன்’, ‘ஜகஜால கில்லாடி’, ‘எஃப்.ஐ.ஆர்’ ஆகிய படங்களில் நடித்து வரும் விஷ்ணு விஷால், பாலிவுட்டில் அறிமுகமாக ஆசைப்பட்டார். தனது தாய் மொழி இந்தி என்பதால் இந்தி சினிமாவில் நடிக்க விரும்பி விஷ்ணு விஷால், தான் தயாரித்து நடித்த வெற்றிப் படமான ‘ராட்சசன்’ படத்தை இந்தியில் ரீமேக் செய்து அறிமுகமாகவும் திட்டமிட்டிருந்தார்.

 

ஆனால், இந்தி மொழியில் டப் செய்யப்பட்டு வெளியான ‘ராட்சசன்’ தற்போது இந்தி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி விட்டதால், இனி அப்படத்தை இந்தியில் ரீமேக் செய்தால் எடுபடாது, என்று பலர் கூறியதால் அந்த முடிவை விஷ்ணு விஷால் கைவிட்டு விட்டாராம்.

 

பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவை, வெற்றிப் படம் கையில் இருந்தும் நிறைவேற்ற முடியவில்லையே, என்று விஷ்ணு விஷால் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாராம். அதே சமயம், இந்தி மொழிக்கு ‘ராட்சசன்’ படத்தை விற்றதால் சில கோடிகள் அவருக்கு வருவாய் கிடைத்திருப்பதால் சற்று ஆறுதல் அடைந்திருக்கிறாரம்.

Related News

6740

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...

விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!
Wednesday June-26 2024

விஜய் மில்டன் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கிறார்...